சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்..! பயணிகளின் தற்போதைய நிலை என்ன..?

சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்..! பயணிகளின் தற்போதைய நிலை என்ன..?

சிங்கப்பூர்: செம்பவாங் வட்டாரத்தில் 2 பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து பயணி ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்தானது மே 27ஆம் தேதி அன்று நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அப்பர் தாம்சன் ரோட்டை நோக்கிய சாலையில் 2 பேருந்துகள் தொடர்பான விபத்து குறித்த தகவல் அன்று (மே 27) பிற்பகல் 1:25 மணியளவில் தங்களுக்கு கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினரும் (SCDF)கூறியுள்ளனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றபோது பேருந்து மோதிய விபத்தில் 64 வயது பயணி ஒருவர் படுகாயம் அடைந்து காணப்பட்டதாகவும் அவரை சிகிச்சைக்காக கூ டெக் புவாட் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் SCDF தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அந்த நபர் சுயநினைவுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் லேசான காயம் அடைந்த மற்றொரு பயணி மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டதாகவும் SCDF கூறியுள்ளது.

இந்த விபத்து குறித்த விசாரணைக்கு 55 வயதான பேருந்து ஓட்டுநர் உதவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

21ம் தேதி அன்று பிற்பகல் 1:00 மணிக்கு விபத்தில் சிக்கிய 858 சேவை எண் கொண்ட பேருந்து ஈ சூன் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்த சிற்றுண்டின் பின்னால் மோதியதாக டவர் டிரான்சிட்பேருந்து நிறுவனம் இன்று (ஜூன் 6) அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒரு பயணி தனது முழங்கையில் வலி இருப்பதாக கூறியதாகவும், மற்ற பயணிகள் அனைவரும் வேறொரு பேருந்தில் பயணத்தை தொடர்ந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த விபத்து குறித்த காணொளி ஆனது முகநூல் பக்கத்தில் பரவி வருகிறது. அதில் பச்சை நிற பேருந்து ஒன்று மற்றொரு பேருந்து பின்னால் மோதுவதை காண முடிகிறது. மேலும் பேருந்தின் முன்புற கண்ணாடியில் விரிசலும், மோதப்பட்ட பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி இருப்பதும் காணொளியில் தெரிகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK