சிங்கப்பூரில் 62 வயது மூதாட்டி மீது தாக்குதல்..!! 37 வயது நபர் கைது..!!
சிங்கப்பூரில் 62 மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 37 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டு காவல்துறை அவரை கைது செய்துள்ளது. அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காவல்துறை ஜூன் 4 ஆம் தேதி இது குறித்த வெளியிட்ட அறிக்கையில், கடந்த மாதம் மே 27ஆம் தேதி காலை சுமார் 7:40 மணியளவில் சுங்கை தெங்கா சாலைப் பகுதியில் 62 வயது மூதாட்டி ஒருவருக்கு அடையாளம் தெரியாத நபரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஏற்பட்டதாக புகார் வந்ததாக தெரிவித்துள்ளது.
புகார் வந்ததையெடுத்து விசாரணையை மேற்கொண்ட ஜூரோங் காவல்பிரிவு அதிகாரிகள் காவல்துறை கேமராக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளம் கண்டு ஜூன் 3-ஆம் தேதி கைது செய்தனர்.
தண்டனை சட்டத்தின் பிரிவு 354A(1)இன் கீழ், தகாத தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது ஜூன் 5 நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பிரம்படி மற்றும் 2 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பொது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தம் வகையில் தீங்கு விளைவிக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் பாலியல் குற்றங்களை சற்றும் காவல்துறை பொறுத்துக்கொள்ள மாட்டாது எனவும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தேக நபரிடம் இருந்து கூடிய விரைவில் விலகி சென்று தங்கள் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் காவல்துறையை அழைக்க வேண்டும் எனவும் காவல்துறை கூறியுள்ளது.