விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்…!!!

விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்...!!!

விமான நிலையங்களுக்கு அருகில் உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்.

தற்போதைய உயரக் கட்டுப்பாடுகள் மாற்றப்படலாம்.இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதனை எதிர்பார்க்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.

40வது சிங்கப்பூர் வணிக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

எனவே, விமான நிலையங்களுக்கு அருகில் உயரமான குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

சிங்கப்பூர் நிலப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

இந்தப் புதிய முயற்சி நிலத்தை சிறப்பாகப் பயன்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.

குடியிருப்பு கட்டிடங்களில் கூடுதலாக 15 தளங்களும், வணிக கட்டிடங்களில் கூடுதலாக 9 தளங்களும் கட்டப்படலாம்.

இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சீ கூறினார்.

இது மேலும் வீடுகளைக் கட்டவும் அனுமதிக்கும் என்று திரு.சீ கூறினார்.