கடந்த மாதம் ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்பனையான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் எண்ணிக்கை புதிய உச்சம்!!

கடந்த மாதம் ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்பனையான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் எண்ணிக்கை புதிய உச்சம்!!

சிங்கப்பூரில் கடந்த மாதம் குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்பனையான வீடமைப்பு கழக வீடுகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 141 ஆக இருந்ததாகவும் கடந்த மாதம் 143 ஆக இருந்ததாக SRX, 99.co ஆகிய இணையதளங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம் மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்பனையான பெரும்பாலான வீடுகள் தோ பாயோவில் அமைந்துள்ளன. அந்த பகுதியில் உள்ள அத்தகைய 25 வீடுகள் கைமாறின. ரெட் ஹில் மற்றும் குயின்ஸ்டவுன் பகுதியில் 16 வீடுகளும், காலாங் வாம்போவில் 13 வீடுகளும் மில்லியன் வெள்ளிக்கு அதிகமான தொகைக்கு விற்பனையானது.

கடந்த மாதம் மறுவிற்பனையான வீடுகளின் எண்ணிக்கை 2284 ஆக இருந்ததாகவும்,அதனை ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிட்டால் குறைவு.இருந்தாலும் மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து உயர்கிறது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan