ரெட்ஹில் HDB குடியிருப்பில் கொலை..! உண்மையில் நடந்தது என்ன?

ரெட்ஹில் HDB குடியிருப்பில் கொலை..! உண்மையில் நடந்தது என்ன?

சிங்கப்பூரின் ரெட்ஹில் பகுதியில் உள்ள லெங்கோங் பாரு ஹெச் HDB குடியிருப்புப் பகுதியில் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 59 வயது நபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இந்த பயங்கர சம்பவத்தில் அதே வயதுடைய மற்றொரு நபர் கொலை செய்ததன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவமானது ஜூலை 20-ஆம் தேதி அன்று மாலை 4: 45 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

ரெட்ஹில் பகுதியில் உள்ள பிளாக் 55 லெங்கோக் பாரு குடியிருப்பின் 16வது மாடியின் மின்தூக்கி அருகே இந்த விபரீத நிகழ்வானது நடந்துள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அண்பை வீட்டாரான இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து காவல்துறையினர் சமூக இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்க 16வது மாடியில் காயங்களுடன் மயங்கி கிடந்த 59 வயது நபரை மீட்டனர்.

பின்பு அவரை உடனடியாக சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.

சம்பவ இடத்திலேயே கொலையில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 59 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதிர்ச்சியூட்டும் விதமாக, இந்த சண்டையின்போது 16வது மாடியில் இருந்து ஒரு கத்தி கீழே உள்ள காபி கடையின் முன்பாக வீசப்பட்டதாக அங்கிருந்து குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK