‘Cyber COP’ என்றால் என்ன.? இணைய மோசடிகளை கண்காணிக்க சிங்கப்பூரில் புதிய திட்டம்..!

‘Cyber COP’ என்றால் என்ன.? இணைய மோசடிகளை கண்காணிக்க சிங்கப்பூரில் புதிய திட்டம்..!

சிங்கப்பூரில் இணைய மோசடிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் நோக்கில், 100 பயிற்சி பெற்ற தொண்டூழியர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய குற்றத்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

‘Cyber COP’ எனப்படும் இந்தத் திட்டத்தை தேசியக் குற்றத் தடுப்பு மன்றமும் (NCPC), சிங்கப்பூர் காவல்துறையும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

ந்தத் திட்டத்தின் கீழ், முறையான பயிற்சி பெற்ற 100 தொண்டூழியர்கள் இணையத் தளங்களை கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக, இணையத்தில் நடைபெறும் மோசடிகளைக் கண்டறிந்து, அவற்றைத் தடுப்பதற்கான பணிகளில் அவர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர்.

Cyber COP திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தொண்டூழியர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் இணையக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தேசியக் குற்றத் தடுப்பு மன்றத்தின் தலைவர் ஜெரால்டு சிங்கம் தெரிவித்துள்ளார்.

மின்னிலக்க யுகத்திற்கு ஏற்ப குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மாற்றியமைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும், புதிய பங்காளிகளை இணைத்து, அதிக எண்ணிக்கையிலான சிங்கப்பூரர்கள் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உருவாக்கவும் இந்த முயற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அந்த வகையில், பயிற்சி பெற்ற தொண்டூழியர்களை இணையக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவதன் மூலம், மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த முயற்சிகள் குறித்து தேசியக் குற்றத் தடுப்பு மன்றம் செப்டம்பர் 4ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த குற்றத் தடுப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் விளக்கப்பட்டது.

குற்றங்களைத் தடுப்பதில் பங்களித்த 10 அமைப்புகளுக்கு அந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.

மோசடிப் பரிவர்த்தனைகளைத் தடுப்பது, கடைகளில் திருட்டுச் சம்பவங்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்புகள் பாராட்டப்பட்டன.

விருது பெற்ற அமைப்புகளில் UOB வங்கி, OCBC வங்கி, Go-Ahead Singapore, Singapore Pools, Marina Bay Sands, Shin Min Daily News, Tower Transit, SBS Transit, M Hotel Singapore City Centre மற்றும் Xi’an Shaanxi Medical Association ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மின்னிலக்க தளங்களில் நடைபெறும் மோசடிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மாற்றமடைந்து வருகின்றன.

அந்த வகையில், Cyber COP திட்டத்தின் மூலம் 100 பயிற்சி பெற்ற தொண்டூழியர்கள் இணையத்தைக் கண்காணித்து, மோசடிகளைக் கண்டறிந்து தடுக்க காவல்துறைக்கு உதவி வருகின்றனர்.