ரெட்ஹில் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!! அண்டை வீட்டாருக்கு கொலை குற்றச்சாட்டு ஏன்..?
சிங்கப்பூர் ரெட்ஹில் பகுதியில் உள்ள லின் கு பாரு அடுக்குமாடி குடியிருப்பில் அண்டை வீட்டாருக்குள் ஏற்பட்ட மோதலில், 59 வயது நபர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மற்றொரு 59 வயது நபர் மீது இன்று (ஜூலை 22) நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தண்டனை சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) மாலை சுமார் 4:45 மணி அளவில் காவல்துறைக்கு உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
அங்கு 16 வது மாடி காரிடரில் மயக்க நிலையில் ரத்த காயங்களுடன் கிடந்த 59 வயது நபர் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். இச்சம்பம் குறித்த முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபரும் உயிரிழந்த நபரும் அண்டை வீட்டார் என்பதும் அவர்களுக்குள் நீண்ட நாட்களாகவே தகராறு இருந்து வந்ததும் தெரிய வந்தது.