உட்லண்ட்ஸில் பரபரப்பு..!!திடீரென தீப்பற்றிய EV வாகனம்..!

உட்லண்ட்ஸில் பரபரப்பு..!!திடீரென தீப்பற்றிய EV வாகனம்..!

சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள HDB பலமாடி வாகனம் நிறுத்தும் இடத்தின் நுழைவு வாயிலுக்கு அருகே  நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனம் (EV) ஒன்று திடீரென தீப்பிடித்து கடுமையாக எரிந்துள்ளது.

இந்த விபத்து நேற்று (ஜூலை 21) காலை 10:10 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

உட்லண்ட்ஸ் டிரைவ் 44 இல் உள்ள விஸ்டா பாயிண்ட் அருகே பிளாக் 548 பலமாடி வாகனம் நிறுத்துமிடத்தின் நுழைவு வாயிலில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.

காரின் ஓட்டுநர் வாகனத்தை ஓட்டி சென்ற போது திடீரென கருகிய வாசனை வீசுவதைக் கவனத்துள்ளார். உடனே காரை நிறுத்திவிட்டு பார்த்தபோது ஓட்டுநர் மற்றும் இருக்கைக்கு இடைப்பட்ட பகுதியில் புகை கிளம்பி தீப்பிடிக்க தொடங்கியுள்ளது.

அங்கிருந்து பாதுகாப்பு காவலர்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்ற போது, தீ மிக வேகமாக காரின் உட்புறம் முழுவதும் பரவியதால் அவர்களால் அந்த தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

பின்பு இந்த சம்பவம் குறித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு SCDF படையினர் விரைந்து வந்தனர்.

ஒரு வாட்டர் ஜெட்டைப் பயன்படுத்தி தீயை முழுமையாக வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் காரின் உட்புற பகுதிகள் மற்றும் முன்பக்க டேஷ் போர்டு அனைத்தும் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்தது.

மின்சார வாகனம் என்பதால் தீ பிடித்ததற்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK