சூட்கேஸ் பிராங்க் வீடியோவால் சர்ச்சையில் இம்ரான்..! இணையத்தில் கடும் கண்டனம்!

சூட்கேஸ் பிராங்க் வீடியோவால் சர்ச்சையில் இம்ரான்..! இணையத்தில் கடும் கண்டனம்!

சிங்கப்பூரைச் சேர்ந்த இம்ரான் என்ற பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்ஸர் (Influencer) செய்த ஒரு சம்பவமானது இணையத்தில் பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

சூட்கேஸில் மக்களை ஒழித்து வைக்கும் குறும்புச் செயல் குறித்த வீடியோவால் தற்போது அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இம்ரான் தனது நண்பர் ஒருவரை ஒரு பெரிய கருப்பு நிற சூட்கேஸிற்குள் அமர வைத்து அதன் சிற்பை முழுமையாக மூடியுள்ளார்.

பின்பு சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் அதிகாலை 3:00 மணி அளவில் அந்த வழியேச் சென்ற முன்பின் தெரியாத ஒரு நபரிடம் எனது காரின் பூட்டியில் இந்த கனமான பையை தூக்கி வைக்க உதவ முடியுமா?என்று உதவி கேட்டுள்ளார்.


அந்தப் பையைத் தூக்கும் போது உள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த அந்த நபர் பயந்து போய் பின்வாங்கியுள்ளார். பின்னர் மற்றொரு வழிப்போக்கரிடம் உதவி கேட்டடு அந்த பையைக் காரில் ஏற்றப்பட்டது.

இரு வழிப்போக்கர்களும் பீதி அடைந்த தருணத்தில் இம்ரான் இது வெறும் குறும்பு வீடியோ (Prank) என்று கூறி சிரித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பல காரணங்களுக்காக தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அண்மையில் தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் சூட்கேட்ஸில் கண்டெடுக்கப்பட்ட கொடூரமானக் கொலை சம்பவத்தை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதுபோன்ற ஆபத்தான பிரங்குகளால் எதிர்காலத்தில் நிஜமாகவே யாராவது கடத்தப்பட்டால் கூட பொதுமக்கள் அதை பிராங்க் என்று நினைத்து அலட்சியப்படுத்தும் அபாயத்தை உருவாக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்

சூட்கேஸ்க்குள் அடைக்கப்பட்டிருந்த நண்பருக்கு மூச்சு திணறல், கடுமையான வெப்பம் அல்லது திடீர் மாரடைப்பு போன்ற மருந்து அவசர நிலைகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற பாதுகாப்பு கவலைகளும் இணையத்தில் எழுப்பப்பட்டுள்ளன.

நள்ளிரவில் உதவி செய்ய வந்த பொதுமக்களை அச்சுறுத்தி அவர்களைப் பதற்றம் அடைய செய்வது வேடிக்கையானது அல்ல எனவும் மக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.