விபத்தில் சாய்ந்த தெருவிளக்கு கம்பம்..!! ஜூரோங் வெஸ்டில் போக்குவரத்து பாதிப்பு..!!

விபத்தில் சாய்ந்த தெருவிளக்கு கம்பம்..!! ஜூரோங் வெஸ்டில் போக்குவரத்து பாதிப்பு..!!

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சங்கிலித் தொடர் விபத்தில், இருவர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பி உள்ளனர்.

இந்த விபத்தானது நேற்று (ஜூலை 21) மதியம் 12:40 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

ஜூரோங் வெஸ்ட் 1 மற்றும் ஜூரோங் கெனால் டிரைவ் சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் தாக்கத்தால் அங்கிருந்த ஒரு பிரம்மாண்ட தெருவிளக்கு கம்பம் வேரோடு சாய்ந்தது. இதில் ஜூரோங் பெஸ்ட் அவென்யூ 1-இன் கிழக்கு நோக்கிச் செல்லும் இருவழித்தடங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் சிக்கிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

கம்பம் விழுந்து உள்ளதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல்துறை மற்றும் மீட்புப் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு விழுந்த கம்பத்தை அகற்றி சாலையை சீரமைத்தனர்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 34 வயது பெண் ஓட்டுநர் ஒருவர் விபத்து குறித்த விசாரணைக்கு உதவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.