சிங்கப்பூரில் காட்டுக் குரங்குகளின் பிரச்சனை!! எங்கே என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் காட்டுக் குரங்குகளின் பிரச்சனை!! எங்கே என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் காட்டுக் குரங்குகளின் பிரச்சனை!! எங்கே என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!

பொங்கோலில் காட்டுக் குரங்குகளின் பிரச்சனை நீண்ட காலமாக குடி இருப்பாளர்களுக்கு தொந்தரவாக இருந்து வருகிறது.

காட்டு விலங்குகளுக்கு உணவளிப்பது குரங்குகள் குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதற்கான காரணங்களில் ஒன்று என்று சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதைப் பற்றிய கருத்துகளை தெரிவித்த பொங்கோல் குடியிருப்பாளர்கள் அனைவரும் காட்டுக்குரங்கால் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

சமையல் அறையில் இருந்து முட்டைகளை திருடுவது ஆரஞ்சுகளை திருடுவது மற்றும் பால்கனி செடிகளில் இருந்து பழங்களை பறிப்பது போன்றவை இதில் அடங்கும்.

குடியிருப்பாளர்கள் மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள உணவு மற்றும் பழ விற்பனையாளர்களும் இதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.

பொங்கோலின் இறுதியில் அமைந்துள்ள
Southwest@Punggol உணவகம் மற்றும் பார் வாடிக்கையாளர்களை பயமுறுத்துவது உணவை திருடுவது மற்றும் மேஜை பாத்திரங்களை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறைஎன்றும் வெளியில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பொருட்களை உடைத்து விடும் என்றும் இதனால் ஊழியர்களும் சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் உணவக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு 2025 ஜனவரி முதல் மே வரை பொங்கோலில் குரங்குகள் காணப்பட்டதாக தேசிய பூங்கா வாரியத்திற்கு 250 புகார்கள் கிடைத்தன. இது கடந்த ஆண்டு முழுவதையும் விட அதிகம் இதில் குரங்குகள் தனியார் வீட்டுக்குள் நுழைந்து குப்பை தொட்டிகளில் சுற்றி திரிந்ததாக வந்த புகார்களும் அடங்கும்.

காட்டு குரங்கால் ஏற்படும் சேதத்தை குறைக்க,பொங்கோல் குடியிருப்பாளர்கள் அதிகமானோர் பாதுகாப்பு வலைகளை நிறுவியுள்ளனர் குரங்குகள் உள்ளே நுழைவதை தடுக்க கம்பி ஜன்னல்களுக்கான தேவை இந்த ஆண்டு மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக கம்பி ஜன்னல் நிறுவனமான டைமண்ட் கிரில் சிஸ்டம்ஸ் தெரிவித்துள்ளது.

சில குடியிருப்பாளர்கள் புறாக்களுக்கு உணவளிக்க ஜன்னலில் அரிசி வைப்பதால் அது குரங்கையும் ஈர்க்கிறது.

வெளியே வருவது ஒரு குரங்கு மட்டுமல்லாமல் அது ஒரு குழுவாக உணவு வைக்கும் இடத்தை நோக்கி வருகிறது என்றனர்.

ஆனால் குரங்குக்கு உணவு வைக்காத அண்டை வீட்டாரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை வேகமாக இனப்பெருக்கம் செய்ய மனிதர்களைப் பற்றிய பயம் குறைய மனிதர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

தற்பொழுது உள்ளூரில் காட்டு விலங்குகளுக்கு உணவளிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு தற்போது இல்லை என்றும் கல்வி வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan