49 வயது ஓட்டுநர் கைது எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

49 வயது ஓட்டுநர் கைது எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

49 வயது ஓட்டுநர் கைது எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

வழக்கமான போக்குவரத்து சோதனையின் போது திடீரென்று காவல்துறையை பார்த்தவுடன் ஓட முயன்ற 49 வயது லாரி ஓட்டுநர் இறுதியில் காவல் துறையினராலும் பொது மக்களாலும் கைது செய்யப்பட்டார்.

அவர் சந்தேகத்திற்கு இடமான போதைப்பொருள் போலி அடையாள அட்டைகள் மற்றும் கடத்தப்பட்ட சிகரெட் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

சமூக வலைதளத்தில் பரவி வரும் ஒரு காணொளியில் கனரக வாகனம் நிறுத்துமிடத்தில் சாலையில் கை விலங்குகளுடன் அமர்ந்திருக்கும் ஒரு நபரை பல காவல்துறை அதிகாரிகள், சூழ்ந்துள்ளனர். அவர்களில் சிலர் தங்கள் தொலைபேசியை பயன்படுத்தி அந்த நபரை சுற்றியுள்ள பொருட்களை படம் எடுத்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். பின்னர் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்ததும் மேலும் இரண்டு அவசரகால ஊழியர்கள் அந்த நம்பரை மதிப்பிடுவதற்காக வெளியே வந்தனர்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை ஜூன் 28 மாலை 5 மணி அளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடற்கரை விரைவு சாலையில் (MCE) போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர், அப்பொழுது ஃபோர்ட் சாலை அருகே உள்ள ஒரு வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரு லாரி ஓட்டுனரை வழக்கமான ஆய்வுக்காக நிறுத்துமாறு சைகை செய்தனர்,எதிர்பாராத விதமாக சோதனை போது ஓட்டுநர் திடீரென தப்பி ஓடி விட்டார் போலீசார் உடனடியாக பின் தொடர்ந்து சென்றனர்.

பொதுமக்களில் இருவரின் உதவியுடன் போலீசார் ஓட்டுநரை மடக்கிப் பிடித்தனர் பின்னர் சந்தேகத்திற்கு இடமான கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருள் போதைப்பொருள் சாதனங்கள் அவருக்கு சொந்தம் இல்லாத இரண்டு வங்கி அட்டைகள் ஒரு போலி அடையாள அட்டை மற்றும் கடத்தப்பட்ட சிகரெட்கள் உள்ளிட்ட பல சந்தேகத்திற்கு இடமான பொருட்களை அவரிடம் இருந்து கண்டுபிடித்தனர்.

49 வயதான ஆண் ஓட்டுனர் பின்னர் போக்குவரத்து விதிமீறல்,போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள். மோசடி சொத்துகளை வைத்திருத்தல், மற்றும் போலி ஐடி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், சுங்க விதிமீறல், மற்றும் அடையாள அட்டையை போலியாக தயாரித்தல், ஆகிய வழக்குகள் முறையே மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு, சுங்கத்துறை மற்றும் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan