சிங்கப்பூரில் முன்னாள் அமைச்சருடன் தொடர்புடைய ஊழல் வழக்கு..!!இன்று விசாரணை தொடக்கம்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மல்டிபிள் மைலோமா எனும் குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஓங் பெங் செங் (வயது 79), முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனை தனியார் ஜெட்டில் பயணிக்க அழைத்து, வணிக வகுப்பு விமானம் மற்றும் ஹோட்டல் வசதிகளை வழங்கியதற்காக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 165ஐ மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஓங் தற்போது ஒவ்வொரு மாதமும் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது வழக்கறிஞர்கள்,நோயின் தீவிரத்தையும்,சிறைச்சாலை வாழ்க்கை அவரது உடல்நிலைமீது ஏற்படுத்தும் பாதிப்பையும் வலியுறுத்தி,அவருக்கு சிறைத் தண்டனைவிட பதிலாக மருத்துவத் தேவைகளுக்கேற்ப கருணை காட்டவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று (04.08.25), தேசிய நீதிமன்றத்தில் ஓங் நீதியின் போக்கைத் தடுக்க முயன்றது மற்றும் ஊழலில் ஈடுபட்டது எனும் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
வழக்கின் தகவலின்படி, ஈஸ்வரனுக்காக வணிக வகுப்பு விமான டிக்கெட்டிற்காக செலவான S$5,700 தொகையை, திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி ஓங் தனது துணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஓங், சிங்கப்பூர் ஜிபியின் முக்கிய பங்குதாரராகவும், Formula One கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளை சிங்கப்பூரில் நடத்த முக்கிய பங்கு வகித்தவராகவும் குறிப்பிடப்படுகிறார்.
திரு.ஈஸ்வரன், 2015–2024 வரையிலான காலப்பகுதியில் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சராக, பின்னர் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
இந்த வழக்கு, சிங்கப்பூரில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் தீவிரத்தையும், அதிகாரப் பதவியில் உள்ளவர்களுக்கும் சட்டம் ஏற்றத்தாழ்வற்றது என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறது.