அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீங்கள் வெளியே சொல்லும்போது குடை அவசியமா? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீங்கள் வெளியே சொல்லும்போது குடை அவசியமா? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்.

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இம்மாதத்தின் (ஆகஸ்ட் 2025) கடைசி இரு வாரங்கள் பெரும்பாலான நாட்களில் மழையையும் காற்றையும் எதிர்பார்க்கக்கூடும். காலையிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் இன்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் நேற்று(ஆகஸ்ட் 15) வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளது.

சுமத்ராவில் ஏற்படும் புயலால் ஒரு சில நாள்களுக்கு சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் அதிகாலையிலும் காலையிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெரும்பாலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸிற்கும் 34 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும்.

சில நாட்களில் ஈரத்தன்மை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது அந்த நாட்களில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும்.

ஆகஸ்ட் மாதம் முற்பாதியில் ஜுரோங்கில் வழக்கத்தை விட 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக மழை பெய்தது.

அதே வேளையில் இம்மாதத்தின் முதல் பாதையில் பல நாட்கள் சற்று வெப்பமாகவும் இருந்தன பாய லேபாரில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதிகபட்சமாக 35.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு சிலோத்தாரிலும் 2020 ஆம் ஆண்டு அட்மிரல்டியிலும் அதிகமாக 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகின.

சோமர்செட்டில் வழக்கத்தை விட குறைவாக 49 விழுக்காடு மழை மட்டுமே பெய்திருந்தது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan