சிங்கப்பூரில் S PASS, E PASS, PCM, WORK PERMIT - Service Charges பற்றிய விவரங்கள்..!!!

இந்த சர்வீஸ் சார்ஜ் ஏஜெண்டுகளை பொருத்தும் ஏஜென்சிகளை பொருத்தும் மாறுபடும். இது தோராயமான கணக்கு மட்டுமே ஆகும்.
பின்வரும் தகவல்கள் இந்தியாவில் உள்ள லைசன்ஸ்டு ஏஜென்சிகளிடம் மற்றும் Sub- agents களிடமும் சர்வீஸ் சார்ஜஸ் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படுகிறது.
Service charge கட்டுவதற்கு முன் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்:
Food & Room க்கு கொடுக்கும் பணத்தை சம்பளத்தில் பார்த்துக் கொள்வதால் அல்லது வேலைக்குச் செல்லக்கூடிய நிறுவனங்கள் வழங்குமா என்பதை தெளிவாக கேட்டு அறிந்து கொள்வது அவசியமாகும்.
Hotel field ஐப் பொறுத்தவரையில் Food & Room கொடுத்து விடுவார்கள். ஆனால் சம்பளம் குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது. வேறு சில நிறுவனங்களில் Food மட்டும் கொடுப்பார்கள். Room தரமாட்டார்கள். Room க்கு பணம் கொடுப்பார்கள்.
சிங்கப்பூரை பொறுத்தவரையில் ரூம் வாடகைக்கு குறைந்தபட்சமாக 350 – 400 டாலர் வரை செலவழிக்க வேண்டும். மேலும் உணவிற்கு மாதந்தோறும் குறைந்தபட்சமாக 200 டாலர்கள் செலவாகும்.
ஆகையால் நீங்கள் செல்லும் கம்பெனியில் வழங்கப்படும் சம்பளத்தை Food & Room தரவில்லை என்றால் அதை நீங்கள் உங்கள் சம்பளத்தில் செலுத்த வேண்டி இருந்தால் அந்த செலவு போக வீட்டிற்கு உங்களால் எவ்வளவு அனுப்ப முடியும் என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு வேலைக்கு செல்வது நல்லது.
நீங்கள் பார்க்கப் போகும் வேலையானது S PASS, E PASS க்கு செலுத்திய தொகையை குறைந்தபட்சம் 6 மாதத்திற்குள் சம்பாதிக்க முடியுமாறு இருப்பின் அந்த வேலையை தேர்ந்தெடுங்கள் இல்லையெனில், அந்த வேலையை தவிர்ப்பது நல்லது.
S PASS, E PASS, NTS PERMIT Service Charges:
✓குறைந்தபட்சம் 4.50 லட்சம்
✓அதிகபட்சம் 9 லட்சம்
இதுபோன்று சர்வீஸ் சார்ஜ்களை நிர்ணயம் செய்வது ஏஜென்ட்கள் தான். வேலை செய்பவர்களின் இரண்டு மாதங்களின் சம்பள அளவையே சர்வீஸ் சார்ஜ் ஆக வாங்க வேண்டும் என அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த சர்வீஸ் சார்ஜ் ஆனது அதிகமாக ஏஜென்ட் கூறினால் வேலைக்கான சம்பளம் அதிகமாக உள்ளது என அர்த்தம் அதேவேளையில் சர்வீஸ் சார்ஜ் ஆனது குறைவாக கூறினால் சம்பளம் குறைவாகவே இருக்கும் என புரிந்து கொள்ள வேண்டும்.
Tax பற்றி ஏஜெண்டுகளிடம் தெளிவான தகவலை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு சில ஏஜெண்டுகள் Tax பற்றிய விவரங்களை கொடுப்பதில்லை. Tax ஐ சம்பளம் மூலம் கட்டிக் கொள்ளுமாறு சில ஏஜென்ட்கள் கூறும் வாய்ப்புகளும் உள்ளது.
IP இல் உங்களுக்கு சம்பளம் அதிகமாக போட்டிருப்பதால் Tax அதிகமாக வர வாய்ப்புள்ளது. ஆனால் உங்கள் கையில் கொடுக்கும் சம்பளம் குறைவாகவே இருக்கும். அதனால் Tax ஐப் பற்றிய முழு விவரம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதன் காரணமாக டேக்ஸ் பற்றிய விவரங்களை ஏஜென்ட்களிடம் தெளிவாக கேட்டு அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
இதனை வைத்து உங்களுக்கு அதிக சம்பளம் கிடைக்குமா? என்பதை உணர்ந்து வேலைகளை தேர்வு செய்வது நல்லதாகும்.
Work Permit:
இந்த permit இல் வேலையானது கடினமாக இருக்கும். அதனால் டெஸ்ட் அடித்திருந்தாலும் தமிழர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்பவில்லை.
மற்ற நாட்டினரை வேலைக்கு எடுப்பதில் தற்பொழுது சிங்கப்பூரில் பல கம்பெனிகள் குறியாக உள்ளது. தமிழர்கள் வேலை செய்ய தயங்குவதால் அவர்களை வேலைக்கு எடுக்க தயங்குகிறார்கள்.
Test அடித்தவர்கள் தற்போது fresher ஆக வெளிநாட்டிற்கு செல்ல செலுத்த வேண்டிய தொகை குறைந்தபட்சம் 1.50 – 2 லட்சம் வரை இருக்கும்.
U- turn worker ஆக இருப்பவர்களுக்கு 1.30 – 1.70 லட்சம் வரை வேலைக்கு செலுத்த வேண்டிய சர்வீஸ் சார்ஜ் தொகை இருக்கும்.
PCM PERMIT Service Charges:
🔷2.50 – 3 லட்சம் வரை சர்வீஸ் சார்ஜ் ஆனது இருக்கும்.
🔷 இதற்குமேல் கட்டண தொகை அதிகமாக கேட்டால் அந்த வேலைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
🔷PCM PERMIT, SHIPYARD PERMIT இல் செல்பவர்களுக்கு வேலை மிகவும் கடினமாக இருக்கும். கடினமான வேலையை செய்ய விருப்பமுள்ளவர்கள் மட்டும் இந்த வேலையை தேர்வு செய்வது நல்லது.
🔷வேலை செய்ய முடியாத சூழ்நிலையில் திரும்பி வர முடிவு எடுத்தால் சர்வீஸ் சார்ஜை திரும்ப ஏஜெண்டுகள் கொடுக்க மாட்டார்கள்.
SHIPYARD PERMIT Service Charges:
🔶1.30 – 2 லட்சம் வரை service charge இருக்கும்.
🔶 சில நிறுவனங்களில் வேலைக்கான இலவசப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
TEP PASS Service Charge:
💠அதிக தொகை செலுத்தினால் நீங்கள் கட்டிய பணத்தை மட்டுமே சம்பாதிக்க முடியும் அதிக தொகையை எடுக்க முடியாது. தற்போது TEP மூலம் வரும் வேலைகள் ரிஜெக்ட் ஆகிறது.
💠மேலும் TEP PASS மூலம் வேலைக்கு செல்பவர்கள் மூன்று மாதங்கள் மட்டுமே வேலை செய்ய இயலும்.
💠1.50 – 2 லட்சம் வரை சர்வீஸ் சார்ஜ் ஆனது ஏஜெண்டுகள் கேட்பார்.
💠E PASS, TEP PASS தற்பொழுது ரிஜெக்ட ஆவதால் இதன் மூலம் வேலைக்கு செல்பவர்கள் சற்று யோசித்து செல்வது நல்லது.
💠Service charge ஆனது தோராயமாக பின்வரும் தொகையில் தான் இருக்கும்.
S PASS, E PASS, NTS PERMIT – Service CHARGE
✓3 – 4.45 லட்சம்
WORK PERMIT – Service Charge
✓அதிகபட்சமாக 1.20 லட்சத்திற்குள் இருக்கும்.
U TURN Worker – Service Charge
✓அதிகபட்சமாக 1.10 லட்சத்திற்குள் இருக்கும்.
SHIPYARD PERMIT – Service Charge
✓1.30 – 1.80 லட்சத்திற்குள் இருக்கும்.
PCM PERMIT – Service Charge
✓1.30 – 2.50 லட்சம் வரை இருக்கும்.
TEP PASS – Service Charge
✓1.30 – 1.60 லட்சத்திற்குள் இருக்கும்.
TEP PASS க்கு மட்டும் ஒரு சில கம்பெனிகளில் சம்பளம் அதிகமாக இருந்தால் 5,000 அல்லது 10,000 வித்தியாசமாக சர்வீஸ் சார்ஜ் வரும்.
இது போன்ற பயனுள்ள தகவலை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது www.sgtamilan.com இணையதளத்தை பார்க்கவும்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
