லேக்சைட் ரயிலில் இ-சிகரெட் சர்ச்சை..!!19 வயது இளைஞர் மீது நடவடிக்கை…!!!

லேக்சைட் ரயிலில் இ-சிகரெட் சர்ச்சை..!!19 வயது இளைஞர் மீது நடவடிக்கை...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சுரங்கப்பாதை (MRT) ரயிலில் இ-சிகரெட் பயன்படுத்தியதாகவும், அதைத் தடுத்து நிறுத்திய ரயில் நிலைய ஊழியரை தாக்கியதாகவும் 19 வயது இளைஞர் ஒருவர் போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக SMRT தலைமை நிர்வாக அதிகாரி லாம் ஹியு காய் தெரிவித்ததாவது, ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12:15 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது


அதன்பின் 12:20 மணிக்கு லேக்சைட் எம்ஆர்டி நிலையத்தின் (201 Boon Lay Avenue) பாதுகாப்பு உதவி கேட்டு போலீசாருக்கு அழைப்பு வந்தது.

ரயிலில் ஒருவர் இ-சிகரெட் புகைப்பதை கண்ட பயணி,ரயில் நிலைய ஊழியர்களிடம் புகார் அளித்தார்.உடனடியாக ஊழியர்கள் அந்த நபரை அடையாளம் கண்டு, ரயிலில் இருந்து இறக்கினர்.

பின்னர் அவரை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இருந்தபோது, அந்த நபர் திடீரென ஆக்ரோஷமாக நடந்து, ஊழியர்களைத் தள்ளி, தன் இ-சிகரெட்டை மீண்டும் பெற முயன்றார்.

அவர்கள் மேலும், அந்த நபரின் நடத்தை ரயில் நெட்வொர்க் விதிமுறைகளை மீறுவதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தனர். இதனால், அவருக்கு குற்ற அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 


போலீசார், அந்த இளைஞன் குற்றவியல் வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இ-சிகரெட், சுகாதார அறிவியல் ஆணையத்திடம் அப்புறப்படுத்துவதற்காக ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan