அதிர்ச்சி...!!சாங்கி விமான நிலையம் அருகே கார் விபத்து...!!
சிங்கப்பூர்: சாங்கி விமான நிலைய பவுல்வர்டு பகுதியில் நேற்று (20.08.25) மாலை 6 மணியளவில் நடந்த கார் விபத்தில் 74 வயது தம்பதியினர் காயமடைந்தனர்.
SGRV பேஸ்புக்கில் பகிரப்பட்ட காணொளி படி, ஒரு சிவப்பு நிற கார் சிறிய சாலையிலிருந்து பவுல்வர்டுக்குள் நுழையும்போது, எதிரே வந்த கருப்பு நிற காரில் மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன்பின் கார் சாலையில் கவிழ்ந்தது.
வீடியோவில் கருப்பு நிற காரின் முன்பகுதி சேதமடைந்ததும், அது சாலையின் ஓரத்தில் மோதிய பிறகு நின்றதும் தென்பட்டது. விபத்து நடந்த நேரத்தில், அருகே சென்ற காரின் டாஷ்கேம் காட்சி பதிவாகியுள்ளது. அதில் சென்ற ஓட்டுநருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சிங்கப்பூர் காவல் துறையின் தகவலின்படி, விபத்தில் மூன்று கார்கள் சம்பந்தப்பட்டுள்ளன. 74 வயது ஆண் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது சுயநினைவுடன் இருந்தார். ஆனால், 74 வயது பெண் பயணி சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இருவரும் தற்போது சாங்கி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.