UAE க்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானத்தின் திடுக்கிடும் தகவல்..!!!
திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில்(UAE) உள்ள ஷார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் நேரடி விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
அதிகாலை 4:25 மணிக்கு வழக்கமாக இந்த விமானம் புறப்படும். பகல் 1:50 மணிக்கு சார்ஜாவிற்கு செல்லும்.
அதுபோன்று இன்று (செப்டம்பர்) 5-ஆம் தேதி அதிகாலை 4:25 மணிக்கு பதில் 5:40 மணிக்கு புறப்படும் என்று விமான நிறுவனமானது ஒரு அறிவிப்பு விடுத்தது. அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து 5:40 மணிக்கு விமானம் புறப்பட ஆரம்பித்தது.
இந்த விமானத்தில் 176 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். ரன்வேயில் ஏறி டேக் ஆஃப் ஆக முயன்ற விமானமானது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ஓட முடியாமல் நடு ரன்வேயில் நின்றது.
விமானத்தால் தொடர்ந்து டேக் ஆப் ஆக முடியாது என தெரிந்து ரன்வையிலேயே விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பயத்தில் உறைந்தனர்.
சுமார் 2 மணி நேரம் பயணிகளை இறங்க விமானத்தில் உள்ளவர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு 12 மணிக்கு வேறு விமானம் வரும் எனவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது அறிவிப்பை வெளியிட்டது.
அறிவிப்பு வந்தவுடன் பிறகு பயணிகள் காத்திருப்போர் பகுதிக்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். டேக் ஆப் ஆவதற்கு முன்பே இந்த தொழில்நுட்ப கோளாறு தெரிய வந்ததால் விபத்து ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து மணப்பாறையைச் சேர்ந்த சர்தார் பாட்ஷா மற்றும் பயணிகள் விவரங்களை தெரிவித்தனர்.