சிங்கப்பூரிலிருந்து டிஸ்னி கப்பல் புறப்படுவதில் தாமதம்..!!!

சிங்கப்பூரிலிருந்து டிஸ்னி கப்பல் புறப்படுவதில் தாமதம்..!!!

சிங்கப்பூர்: டிஸ்னி அட்வென்ச்சர் கப்பல் ஆனது சிங்கப்பூரின் மெரினா பே குரூஸ் மையத்திலிருந்து அதன் முதல் பயணத்தை புறப்பட திட்டமிட்டு இருந்தது.

டிஸ்னி குரூப் லைன் கப்பலை கெண்டிங் ஹாங்காங்கின் டிரீம் குரூஸஸிடம் இருந்து பாதி அளவு கட்டி முடித்தபடி வாங்கியது.

பிறகு கப்பலின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கட்டுமான பணிகள் முடிந்தவுடன் தனது முதல் பயணத்தை டிஸ்னி அட்வென்சர் கப்பலானது தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று (11/09/2025) வியாழக்கிழமை முதல் பயணத்தை தொடங்கவில்லை என டிஸ்னி சிக்னேச்சர் எக்ஸ்பீரியன்ஸின் தலைவர் ஜோ ஷாட் கூறியுள்ளார்.

கப்பல் கட்டுமான பணியில் தாமதங்கள் ஏற்பட்ட காரணத்தினால் முதல் பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

கப்பலின் முதல் பயணத்தில் பயணம் செய்வதற்காக விருந்தினர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முதல் பயணத்தில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் வேறு தேதிக்கு கப்பல் பயணத்தை மாற்றியமைக்கப்பட்டது.

இந்த கப்பலில் சுமார் 6,700 பயணிகள் பயணம் செய்ய முடியும். மேலும் 2500 பணியாளர்கள் இந்த கப்பலில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 15, 2025 அன்று இந்த கப்பலானது சிங்கப்பூரின் மெரினா பே குரூஸ் மையத்திலிருந்து தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுமான பணிகளின் தாமதத்தால் பயண தேதியானது மார்ச் 10, 2026 என்ற புதிய தேதி அறிவிக்கப்பட்டது.

இதனால் டிசம்பர் 15, 2025 முதல் மார்ச் 12, 2026 வரை திட்டமிட்ட 25 கப்பல் பயணமானது பாதிக்கப்பட்டுள்ளது என்று டிஸ்னி குரூஸ் லைன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

முன்பதிவு செய்துள்ளவர்களின் கவனத்திற்கு:
முதல் பயணத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கு புதிய தேதியில் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும் அவர்களுடைய முன்பதிவு கட்டணத்தில் 50 விழுக்காடு தள்ளுபடியும் வழங்கப்படும்.

புதிய தேதியில் குறிப்பிடப்பட்ட போது முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளால் பயணம் செய்ய முடியாவிடில் அவர்களுடைய முழு பணத்தையும் திரும்ப பெற கூறலாம்.

புதிய பயண தேதியை தேர்ந்தெடுக்க விரும்பும் முன்பதிவு செய்த பயணிகளால் தங்களுடைய பயண ஆலோசகரிடம் பேசி தகவல்களை பெறலாம்.

டிஸ்னி குரூஸ் லைனில் நேரடியாக முன்பதிவு செய்திருந்த பயணிகள் நிறுவனத்தின் உடைய வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை பயன்படுத்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan