சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் பரிதாபமாக உயிரிழப்பு..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் உள்ள சிலேத்தார் விரைவு சாலையில் மார்ச் 12ஆம் தேதி டாக்ஸி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்த தகவலானது குடிமை தற்காப்பு படையினருக்கு மார்ச் 13ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய 36 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 70 வயதைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர் சிகிச்சைக்காக கூ டெக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக காவல் துறையும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு துறையினரும் பார்த்ததாக கூறினர்.
இந்த விபத்து குறித்த காணொளி பதிவானது sgroadvigilante என்ற facebook பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அந்த பதிவில் எச்சரிக்கை விளக்கு தெரிந்து கொண்டிருந்த நிலையில் டாக்ஸி சாலையின் நடுவில் இருப்பது தெரிய வந்தது மேலும் மற்றொரு காணொளி பதிவில் டாக்ஸி முழுவதுமாக சேதமடைந்ததும் அதன் அருகே மோட்டார் சைக்கிள் இருந்ததையும் காணமுடிகிறது.
டாக்ஸினுடைய பின்புறம் இருக்கும் கண்ணாடியில் ரத்தம் இருப்பது போல் புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டான 2025 ஆம் ஆண்டு சாலை விபத்தில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையானது 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது 149 ஆக பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது குறைவாக அதாவது 141 ஆக இருந்ததை போக்குவரத்து காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.