சிங்கப்பூர் வேலைக்கு சென்ற பெண்ணின் கசப்பான அனுபவம்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!
தமிழ்நாட்டில் இருந்து பல பெண்கள் சிங்கப்பூருக்கு தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்காகவும் வேலைக்கு செல்கின்றனர்.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் இது கை கூடுகிறதா என்றால் இல்லை என்றே கூறலாம்.
அண்மையில் நமது வாசகர் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள அழகு நிலையம் ஒன்றுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அந்த அழகு நிலையத்தில் முதலாளி அவரிடம் வேலை செய்யும் வீடியோவை பார்த்துவிட்டு அவரிடம் பேசி வேலையை பற்றி கேள்விகள் அனைத்தும் கேட்டு தேர்வு செய்து தான் வேலைக்கு எடுத்துள்ளார்.
ஆனால் அங்கு சென்ற பிறகு அவருக்கு வேலை தெரியவில்லை என்று கூறி அவரை இந்தியாவிற்கு திருப்பி போக சொல்லியுள்ளார்.
அவரும் என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று ஏஜென்டிடம் கேட்டதற்கு சிங்கப்பூரில் உள்ள ஏஜெண்டுகள் அவரிடம் அதற்கு முன்பாகவே பல கையெழுத்தை வாங்கிக் கொண்டதால் தர முடியாது என்று சொல்லி உள்ளனர்.
MoM சென்ற பொழுது சரியான ஆதாரம் இல்லாததால் அவருக்கு உதவி செய்ய முடியாது என்று சொல்லி உள்ளனர்.
தற்பொழுது அவருக்கு மிகவும் சொற்பத் தொகையை திரும்பி கிடைத்துள்ளது.
இதனால் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் வரை அவர் இழந்துள்ளார்.
எனது தயவு செய்து வெளிநாடு செல்லும் பெண்கள் மிகவும் கவனத்துடனும் சரியான ஏஜெண்டுகளை தேர்ந்தெடுத்தும் வேலை தெரிந்தால் மட்டுமே செல்ல வேண்டும் என்று அவர் நம்மிடம் தெரிவித்தார்.