ஹோட்டல் அறையில் பணத்தை தொலைத்த சுற்றுலாப் பயணி..!!என்ன நடந்தது..??
சிங்கப்பூர்: செந்தோசாவில் உள்ள வில்லேஜ் ஹோட்டலில் தைவானிய சுற்றுலாப் பயணி திரு. ஜாங் தனது அறை சேவை பணியாளரால் S$3,000 பணம் திருடப்பட்டதாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.
இம்மாதம் 10 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார்.பின்னர் 16 ஆம் தேதி வில்லேஜ் ஹோட்டல் செந்தோசாவில் தங்கியிருந்தார்.
அன்று மதியம் ஹோட்டலுக்குள் நுழைந்த பிறகு, ஹோட்டல் அறையில் உள்ள மேஜையில் S$3,000 ரொக்கம் கொண்ட பையை வைத்துவிட்டு, கதவைப் பூட்டிவிட்டு, ஹாலோவீன் திகில் இரவுகளில் பங்கேற்க யுனிவர்சல் ஸ்டுடியோவுக்குச் செல்வதற்காக இரவு 7 மணியளவில் ஹோட்டலை விட்டு வெளியேறினார்.
மறுநாள் (17.10.25) செக் அவுட் செய்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, திடீரென முழு பணப் பையையும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்ததாகவும், அதனால் ஹோட்டல் மேலாளரிடம் உதவி கேட்டதாகவும், அதே நேரத்தில் காவல்துறையினரையும் அழைத்ததாகவும் அவர் கூறினார்.
பின்னர், பணியாளரின் லாக்கரில் பிளாஸ்டிக் பையை கண்டுபிடித்தார்கள். ஆனால் பணம் அந்த இடத்தில் இல்லை.
ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு முழுமையாக ஒத்துழைக்கின்றது மற்றும் விசாரணை முடிவதற்குள் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. திரு. ஜாங் இந்த சம்பவத்தால் பெரிதும் ஏமாறியதாகவும், பயண ஆர்வம் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக 34 வயது பெண்ணிடம் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.