இரு நிறுவனங்களின் UEN ஐ முறைகேடாகப் பயன்படுத்தி மின்சிகரெட் ஏற்றுமதி செய்த நிறுவனம்..!!!
கடந்த ஆண்டு(2024) ஜனவரி 15ஆம் தேதி துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மலேசியாவில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பொருட்களை சுங்கத்துறை ஆய்வு செய்தது.
Ayzo Pte Ltd ஒரு நிறுவனத்தின் அடையாள எண்ணை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தி பொருட்களுக்கு நான்கு அனுமதிகளுக்கு விண்ணப்பித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தேவைக்கேற்ப ஏற்றுமதி சரக்கு பில்லை சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் செய்திக்குறிப்பில் தெரியவந்துள்ளது.
சுங்கத்துறை ஆஸ்திரேலியா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தது அவர்கள் கப்பலை ஆய்வு செய்தபோது உண்மையில் அறிவிக்கப்பட்ட பொருட்கள் அல்ல எனவும், அது 10 மில்லியனுக்கும் அதிகமான மின் சிகரட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது அதே ஆண்டு(2024) பிப்ரவரி மாதம் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐந்து சரக்குகளில் நான்கிற்கு 16 ஏற்றுமதி அனுமதிகளுக்கும் விண்ணப்பிக்கும் போது Ayzo Pte Ltd மற்றொரு நிறுவனத்தின் அடையாள எண்ணை பயன்படுத்தியதும் ஏற்றுமதி பில்களை தக்க வைத்துக்கொள்ள தவறு ஏதும் தெரியவந்துள்ளது.
இந்த சரக்குகளில் மின் சிகரெட்டுகள் மற்ற பொருட்களாக தவறாக அறிவிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
சரணியில் இந்தியாவில் அடையாளம் தெரியாத ஒருவர் சிகரெட்டுகளுக்கான அனுமதிக்க விண்ணப்பிக்கவும் போக்குவரத்து சேவைகளை வழங்கவும் Ayzo நிறுவனம் பணிய அமர்த்தியிருப்பது தெரியவந்துள்ளது.
Ayzo நிறுவனம் அந்த நபர் வழங்கிய தகவல்களையும் பொருட்களையும் சரிபார்க்காமல் அனுமதிக்க விண்ணப்பத்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சிகரெட்டுகளை மற்ற பொருட்களாக பயன்படுத்தி தவறான முறையில் அறிவித்தது தொடர்பான வழக்கு இது எனவும் சிங்கப்பூர் சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ayzo மீது மொத்தம் 26 குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட அவற்றில் 13 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். மற்ற நிறுவனங்களின் அடையாள எண்களை தவறாக பயன்படுத்தியதற்காக உள்ளூர் சரக்கு அனுப்பும் நிறுவனமான Ayzo நிறுவனத்திற்கு $36,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.