மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது.

அதை பிரித்துப் பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

காரணம் அதில் ஒரு சிறிய குரங்கு இருந்துள்ளது.

அதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்த வனத்துறையினர் நேரில் வந்து சோதித்த போது, அது அமேசான் காடுகளில் வசிக்கும் அரிய வகை அணில் குரங்கு என்பது தெரிய வந்தது.

புகைபடம் : அரியவகை அணில் குரங்கு

ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரம் வரை வளரும் இக்குரங்குகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.

ஆனால், வன உயிரியல் சட்டத்தின்படி இந்தியாவை தவிர்த்த மற்ற நாடுகளின் உயிரினங்களை இங்கு கொண்டு வருவது சட்டப்படி குற்றமாக கருதப்படும்.

இந்திய சுற்றுச்சூழலுக்கு தொடர்பில்லாத இதுபோன்ற உயிரினங்கள் இந்தியாவின் அடிப்படை தகவமைப்பை மாற்றக்கூடியவை உயிரினங்கள் ஆகும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan