ஹொங் லிம் உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!

ஹொங் லிம் உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் உள்ள ஹொங் லிம் உணவகத்தில் இரண்டாம் மாடி சமையலறையில் உள்ள புகை போக்கில் நேற்று (02.01.2026) பிற்பகல் திடீரென தீ பற்றியது.

தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்ததை அடுத்த சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் நேற்று பிற்பகல் 12:40 மணிக்கு உணவகத்திற்கு வந்தனர்.

மூன்று தண்ணீர் பாய்ச்சும் கருவிகளை பயன்படுத்தி தீயணைப்பு படையினர் தீயை அணைத்துள்ளனர்.

தீ பற்றிய இடத்திலிருந்து நான்கு பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினர் வெளியேற்றி உள்ளனர்.

யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும் தீ பற்றிய காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த தீ சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொதுமக்கள் அனைவருக்கும் குடிமை தற்காப்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK