சிங்கப்பூரில் ஆன்லைன் உணவக முன்பதிவு தளமாக இயங்கி வந்த குவாண்டூ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியை தலைமை இடமாகக் கொண்ட இந்நிறுவனம் ஆனது சிங்கப்பூர் ஆஸ்திரேலியா இத்தாலி மற்றும் ஐக்கிய நாடுகள் உட்பட தனது உணவகம் முன்பதிவு சேவைகளை வழங்கி வருகிறது.
மார்ச் 24ஆம் தேதி அன்று இந்த தளமானது இணையதளத்தில் செப்டம்பர் 30 வரை மட்டுமே இயங்கும் என்றும் அதன் பிறகு தனது செயல்பாடுகளை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவானது மேலே குறிப்பிட்ட நாடுகளின் உடைய வணிக முடிவு என்று தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்திலும் பயனர்கள் உணவகங்களை கண்டறியவும் முன்பதிவு செய்யவும் இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என வணிக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே உணவகத்தில் முன்பதிவு செய்துள்ள பயனர்கள் தங்களது உணவு உண்ணும் தேதி செப்டம்பர் 30ம் தேதிக்கு முன்னராக இருந்தால் அவர்களது முன் பதிவுகளை ஆன்லைனில் தொடர்ந்து நிர்வகித்துக் கொள்ளலாம்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பின்னர் உணவு நேரங்களுக்கான முன்பதிவுகள் செல்லுபடியாகும். இது தொடர்புடைய தகவல்களை நிறுவனம் உணவகத்திற்கு வழங்கும் என்று கூறியுள்ளது.
தனது செயல்பாடுகளை இந்த தளம் நிறுத்த உள்ளதால் ஜூன் 30 வரை பயணங்கள் அவர்களுடைய ஆன்லைன் புக்கிங் முன்னர் செய்திருந்ததற்கு கிடைத்த புள்ளிகளை பெற முடியும் எனவும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னர் தகுதியான புள்ளிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குவாண்டூ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை தனது தனியுரிமை கொள்கையின்படியும் செயலாக்கும் எனவும் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தரவுகளின் நகலை பெறுவதற்கோ அல்லது அது தொடர்புடைய தகவல்களை நீக்குமாறு கேட்பதற்கோ எந்த நேரத்திலும் dataprotection@quandoo.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.
குவாண்டுவின் இணையதளம் செயலிகள் மற்றும் இதர சேவைகள் டிசம்பர் 31, 2026 அன்று முற்றிலுமாக நிறுத்தப்படும்.
2012 இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஆனது அதன் பிறகு 12 நாடுகளுக்கு விரைவு செய்யப்பட்டு 18,000 க்கும் மேற்பட்ட உணவகங்களில் 15 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.