ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..??
ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கெந்துவாதி பஸ்தியில் டிசம்பர் 3 ஆம் தேதி 12 பேர் உடல்நிலை பாதிப்படைந்துள்ளனர். பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இருந்து வெளி வருகின்ற ‘கார்பன் மோனாக்சைடு’ என்ற விஷ வாயு கசிவினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கிந்துவாதி பஸ்தி பகுதியில் வசிக்கக்கூடிய சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு “பாரத் கோக்கிங் கோ” என்ற நிறுவனம் மாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.