அதிர்ச்சி..!! ஜூரோங் வெஸ்ட் பகுதியில் நடந்த விபத்து..!!

அதிர்ச்சி..!! ஜூரோங் வெஸ்ட் பகுதியில் நடந்த விபத்து..!!

சிங்கப்பூர்:ஜூரோங் வெஸ்ட் பகுதியில் நேற்று (23.01.26) காலை நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

36 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சாலையைக் கடக்கும் போது அதிவேகமாக வந்த கார் திடீரென அந்தப் பெண் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும்,இன்று (24.01.26) காலை அவர் உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்து, ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 4 இலிருந்து ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2 நோக்கிச் செல்லும் சாலையில் காலை 7.25 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் எடுத்ததாகக் கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், ஒரு நெட்டிசன் அந்த பெண் சாலையின் நடுப்பகுதியில் கிடந்ததாகவும், சம்பந்தப்பட்ட கார் சிறிது நேரம் நின்ற பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விபத்தில் தொடர்புடைய காரின் ஓட்டுநரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் வெளியிடப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK