சிங்கப்பூரில் மத்திய விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூரில் மத்திய விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூரில் மத்திய விரைவுச் சாலையில் பிரேடலுக்கு வெளியேறும் பகுதிக்கு அருகில் நேற்று (ஜனவரி 6) விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நான்கு வாகனங்கள் முக்கிய உள்ளனர். இதில் மூன்று கார்களும் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்ஸி ஒன்றும் ஆகும்.

இந்த விபத்தில் சிக்கியவர்கள் நான்கு பேரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு நேற்று இரவு 7:20 மணியளவில் தெரியவந்தது.

சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதிகாரிகள் தெரிவித்ததாவது இந்த விபத்தானது மத்திய விரைவு சாலையில் ஜாலான் பஹாகியாவுக்கு வெளியேறும் இடத்திற்கு பிறகு உள்ள சிலேத்தார் விரைவு சாலையை நோக்கி செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய வெள்ளை நிற கார் ஒன்று இரண்டு சிவப்பு கார்களின் மீதும் ஒன்றின் மீது ஒன்றாக இருந்தது.

இதனால் நான்கு சாலை தடங்களைக் கொண்ட இந்த மத்திய விரைவு சாலையின் உடைய வலது பக்கத்தில் இருக்கும் இரண்டு தடங்களும் மூடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து ஏற்பட்டபோது குறைந்தது இரண்டு ஆம்புலன்ஸ்கள் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK