மலேசியா சென்றடைந்தார் நடிகர் விஜய்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!!

மலேசியா சென்றடைந்தார் நடிகர் விஜய்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!!

மலேசியா: தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று(27.12.25) மலேசியாவில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக விஜய் இந்தியாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு தனி விமானத்தில் வந்தார்.

இதையொட்டி மலேசிய ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

சமூக ஊடகங்களில் அவரது வரவைக் குறிக்கும் பல காணொளிகள் பகிரப்பட்டு வருகிறது.

இளையோர் முதல் முதியோர் வரை அனைவரும் அவருக்காக காத்திருப்பதும், அவர் விமான நிலையத்திலிருந்து காரில் செல்லும் வழியில் ரசிகர்கள் சிலரிடம் கையசைக்கும் வீடியோவும் பரவலாக காணப்படுகிறது.

விஜயின் ‘ஜனநாயகன்’ படம் திரையில் வெளியாகும் இறுதி படமாகும்.அவர் அரசியலில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கு முன்பு இதனை வெளியிட்டு வருகிறார்.

இன்று(27.12.25)நடக்கும் இந்த நிகழ்ச்சியானது இசை வெளியீட்டு விழா மட்டுமல்லாமல் அவருடைய திரையுலக இறுதி பயணத்தை கொண்டாடும் சிறப்பு விழாவாகும்.

விஜய் திருவிழா’ எனப்படும் இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி, விறுவிறுவென விற்றுத்தீர்ந்தது.

இந்த நிகழ்ச்சி புக்கிட் ஜலில் உள்ள விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. அங்கு சுமார் 85,000 பேர் அமர முடியும்.

இன்று மலேசியாவில் இருக்கும் விஜயின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரியர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK