2026 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் வயது மூத்தோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் இரத்த விநியோகத்தின் நிலை தன்மையை உறுதி செய்வது மிகவும் அவசியமாகிறது என்று சுகாதார அறிவியல் ஆணையமும் செஞ்சிலுவை சங்கமும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நோயாளிகள் மொத்த இரத்த சிவப்புபணு பயன்பாட்டில் 60% ஆக உள்ளனர். அதே நேரத்தில் தகுதியான நன்கொடையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஆனால் இரத்தத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இரத்த தானம் செய்பவர்களுக்கான வயது வரம்பை உயர்த்துவதற்கான நடவடிக்கையை பல நாடுகள் எடுத்து வருகிறது.
வயது வரம்பை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவை ஊழியர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இரத்த வங்கிகளில் தொடர்ந்து இரத்த தானம் செய்ய ஊக்குவிப்பதற்கான தீவிரமான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த நிகழ்வில் 2000-க்கும் மேற்பட்ட நீண்ட கால இரத்த தானம் செய்பவர்கள் 37 அமைப்புகளும் கௌரவிக்கப்பட்டன.
உயிர்களை காப்பாற்றுவதில் அவர்களின் பங்களிப்புக்கு தேசிய இரத்ததான திட்டத்திற்கு அவர்கள் தொடர்ந்து அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமைச்சர் விருதுகளை வழங்கினார்.