சிங்கப்பூரில் மரச்சாமான்கள் செய்யும் நிறுவனம் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் மரச்சாமான்கள் செய்யும் நிறுவனம் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் மரச் சாமான்கள் செய்யும் நிறுவனமான ‘தி சிம்பிள் ஃபர்னிச்சர்’ வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளது.

இந்த நிறுவனமானது ஜனவரியில்(2025) டிக் டாக்கில் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்தியுள்ளது.

இதனை கண்ட வாடிக்கையாளர் ஒருவர் தனது கணவருடன் ஷோரூமுக்கு சென்று சோபாக்களை ஆர்டர் செய்ய 1,299 யுவான் முன்பணமாக செலுத்தியுள்ளார்.

அதிகாரப்பூர்வமாக ஆர்டர் கொடுப்பதற்கு முன்பு முழு தொகையையும் செலுத்த வேண்டும் என நிறுவனத்தில் வற்புறுத்தியதாக கூறியுள்ளார்.

இவரைப்போல பல வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு சென்று மரச்சாமான்களை கண்டு பிடித்ததை ஆர்டர் செய்து முன்பணம் செலுத்தி வந்துள்ளனர்.

முன்பணம் வாங்கியும் ஆர்டர் செய்த பொருட்களை நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்று காவல்துறையிடம் புகார் செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை விசாரித்தபோது நிறுவனம் கூறியது: ஆர்டர் செய்த சோபா தவறான நிறமாக உள்ளதாகவும் அவருக்கு வழங்க முடியாது என்று சில காரணங்களை சொல்லி மறுத்துள்ளனர்.

இதனடிப்படையில் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கமானது 36 புகார்களை வாடிக்கையாளர்களிடமிருந்து கடந்த மாதம் 28ஆம் தேதி பெற்றுள்ளது.

விசாரணையின் போது, நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி ஆர்டர் செய்த பொருட்களை வழங்க தவறியதாகவும் கிட்டத்தட்ட 20,000 யுவான் பணத்தை சரியான நேரத்தில் திருப்பி தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

எனவே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்துமாறு மரச்சாமான்கள் விற்கும் நிறுவனத்திற்கு விசாரணையின் போது அறிக்கைகள் வெளியிடப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan