இந்தியாவுக்கு விமான மூலம் போறீங்களா..?? கொஞ்சம் யோசிச்சுக்கோங்க..!!
திடீரென வெடித்த எரிமலை..!! அதுவும் 12000 வருடத்திற்கு அப்புறமா..!!
எரிமலை வெடித்ததற்கும் விமானம் மூலம் போறதுக்கும் என்ன சம்பந்தம்..?? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!
ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற நிறுவனங்கள் துபாய், தோஹா, நியூயார்க் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லி, சென்னை மற்றும் மும்பை செல்லக்கூடிய சில விமானங்களை ரத்து செய்துள்ளது.
காரணம் என்ன? எத்தியோப்பியாவில் உள்ள “ஹைலி கூப்பி” என்கிற எரிமலை ஆனது 12,000 வருடத்திற்கு பிறகு திடீரென தற்போது வெடித்து சிதறியுள்ளது.
எரிமலையில் இருந்து வெளியான ராட்சத சாம்பல் போன்ற மேகமானது, தற்போது காற்றின் மூலம் அடித்து வரப்பட்டு இந்தியாவில் உள்ள வடக்கு பகுதி வானை முழுவதுமாக மூடி இருக்கிறது.
விமான பயணிகளின் கவனத்திற்கு..!! விமான பயணம் மேற்கொள்ளும் முன்பாக நிலவரத்தை முன்பாகவே அறிந்து கொண்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.