குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பேருந்து..!! போலீஸ் விசாரணையில் ஓட்டுநர்..!!
சிங்கப்பூர்: லோயாங் ரைஸ் என்ற தனியார் குடியிருப்பு பகுதிக்குள் கவனக்குறைவால் தவறுதலாக கோ அஹெட் பேருந்து நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லோயாங்க் ரைசில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்களின் மீதும் பேருந்து உரசி விபத்துக்குள்ளான தகவலானது, ஜனவரி 20, 2026 அன்று அதிகாலை 5:05 மணி அளவில் போலீசருக்கு தகவல் கிடைத்தது என்பதை தெரிவித்தனர்.
பேருந்தை ஓட்டியவர் 70 வயது ஆடவர் என்பது விசாரணையின் போது தெரியவந்தது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து 70 வயது பேருந்து ஓட்டுனரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரின் விசாரணைக்கு ஓட்டுனர் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
இந்த செய்தி குறித்து மாவட்ட கவுன்சிலர் லீ நை – யீ, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவி வருவதாகவும் மேலும் சம்பந்தப்பட்ட துறைகள் இந்த விபத்து குறித்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.