நேற்று பிற்பகல் 2:20 மணி அளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளதாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காவல்துறை அதிகாரி எம்.ரவி தெரிவித்துள்ளார்.
அந்த பெண் பால்கனியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அவரை சமாதானம் படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். பின்னர் கோலாலம்பூர் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.
பிறகு அவரை அவசர மருத்துவ குழு பரிசோதித்ததில் அந்த பெண்ணுக்கு முதல் உதவி தேவைப்பட்டதால் அதனை செய்தது. பின்பு அவர் புத்ராஜேயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு மாலை 5:09 மணி அளவில் அவர் மரணம் அடைந்துள்ளார்.