CJ LOGISTICS தொழிலாளர்கள் பணி நீக்கம்..!! தொழிலாளர்களுக்கு NTUC ஆதரவு ..!!
சிங்கப்பூர் : CJ LOGISTICS ASIA என்ற தளவாட நிறுவனம் உள்ளூர் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக இணையத்தில் சமீப காலமாக வதந்திகள் பரவி வருகின்றது.
பாதிக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும் என விநியோக சங்கிலி ஊழியர் சங்கமானது தொழிலாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (NTUC) ஒரு பிரிவான, விநியோக சங்கிலி ஊழியர்கள் சங்கம் நேற்று (ஏப்ரல் 5) வெளியிட்ட அறிவிப்பில், சிஜே லாஜிஸ்டிக்ஸ் ஆசியாவிசின் தொழிலாளர்கள் வேலை தொடர்பாக NTUC -விடம் உதவி கேட்டு தொடர்பு கொண்டதாக தெரிவித்தது.
சிங்கப்பூரில் CJ LOGISTICS ASIA நிறுவனத்திற்கு தொழிற்சங்கம் எதுவும் இல்லை எனவும், அதனால் அதன் சில ஊழியர்கள் விநியோக சங்கிலி ஊழியர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளதாக தொழில் சங்கம் தெரிவித்துள்ளது .
ஆட்குறைப்பு போன்ற வேலைவாய்ப்பு சவால்களை எதிர்கொள்ளும்பொழுது அல்லது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி வழங்க தொழிற்சங்கம் முன்வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமையைப் புரிந்துக் கொண்டு, அவர்களுக்கு தேவைப்பட்டால் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி போன்ற உதவிகளையும், அவர்களுக்கு தேவையான வளங்களை வழங்குவதற்கும் அவர்களை தொடர்பு கொண்டுள்ளதாக விநியோக சங்கிலி ஊழியர் சங்கம் கூறியுள்ளது.