சிங்கப்பூரில் 2 பேருக்கு இடையே மோதல்..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி அன்று அதிகாலை 3:20 மணி அளவில் போட் குவே பகுதியில் 2 பேருக்கும் இடையே திடீரென சண்டை நிகழ்ந்தது.
இது குறித்த தகவலானது காவல்துறையினருக்கு மே 3 அன்று பிற்பகல் தகவல் கிடைத்ததை அடுத்த சமவெளிப்பிற்கு விரைந்து சென்ற போது சண்டையிட்ட கொண்டவர்களில் இருவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உடனே காவல்துறையும் விரைந்து சென்று விசாரணையை தொடர்ந்து, அந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை காவல்துறையினர் நேற்றும், நேற்று முன்தினமும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 31 வயதை சேர்ந்தவர்.
இருவரும் படகுத்துறை ஒன்றில் சண்டையிட்டுக் கொண்டதாக கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மீது இன்று (மே 9) நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற சட்டத்தை மீறுகின்ற வன்முறை செயல்களை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது. விதியை மீறுபவர்கள் மீது கடுமையாக சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.