சிங்கப்பூர்: தேசிய கால்பந்து வீரங்கனை 20 வயதான டோனெல்லே டான், அவர்கள் ஒரு கடிதத்தின் மூலம் தனது விளையாட்டு அனுபவத்தையும் முன்னேறி வந்த பாதையையும் மேலும் அவரைப் போன்று ஒரு சிறுமி பயிற்சியாளர் இல்லாமல் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பற்றியும் விவரித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது பின்வருமாறு: அன்புள்ள சிங்கப்பூர், ஒரு சிறுமி நேற்று என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் கால்பந்து விளையாடுவதைப் பார்த்தேன். அது மிக இரவு நேரத்தில் நடந்த நிகழ்வு. அப்பெண் இரவு உணவுத் தட்டுகள் சுத்தம் செய்து பிறகு கிடைக்கும் நேரத்தில் விளையாடுவாள்.
அவள் தனியாக ஃப்ளட்லைட் வெளிச்சத்தில் இருப்பாள், அவள் மட்டும் பயிற்சியாளர் இல்லாமல் அவளுடைய மிதிவண்டியுடன் இருந்தாள். மற்றவர் உதவி இல்லாமல் தன்னுடைய முயற்சியில் என் கனவை அடைய முடியும் என்ற நம்பிக்கை உடைய ஒரு பெண்.
அந்தக் காட்சியைக் கண்டவுடன் என்னுடைய கனவு காலங்களை நினைவூட்டியதாக இருந்தது. கனவுகள் ஒருபொழுதும் சத்தமிடுவதில்லை என்பதை உணர்ந்த தருணம் என்னுடைய பயிற்சி காலமாகும்.
தினமும் கான்கிரீட் மைதானங்களிலும் அதிகாலையிலும் வலிக்கும் கால்களுடன் யாரும் பார்க்காத போதும் கூட என்னுடைய பயிற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த வாழ்க்கையைப் பற்றி பலர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது வெறும் செய்தியாக இருக்க விரும்பவில்லை இதன் மூலம் பலருக்கு உத்வேகம் கிடைக்க வேண்டும் என நம்புகிறேன்.
ஐரோப்பிய லீக்கில் விளையாடிய முதல் சிங்கப்பூர் பெண் என்ற பெருமை எனக்குக் கிடைத்துள்ளது. மேலும், ஐரோப்பிய லீக் மற்றும் கோப்பை பட்டத்தை வென்ற முதல் சிங்கப்பூர் பெண் என்ற பெருமை எனக்குக் கிடைத்துள்ளது.
அன்புடனும் நம்பிக்கையுடனும், டோனெல்லே என இந்தக் கடிதத்தில் எழுதியுள்ளது.
தேசிய கால்பந்து வீரங்கனை டோனெல்லே டான், தற்போது லயன் சிட்டி மாலுமிகள் பெண்கள் அகாடெமியின் அணியுடன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.
தற்போது டோனெல்லே டான், தேசிய மகளிர் கால்பந்து அணியில் ஒரு ஸ்ட்ரைக்கராக உள்ளார். இந்தக் கடிதமானது ஒரு ஆவணப்படத் தொடராக கனவுகளுடன் வாழும் சிங்கப்பூரர்களுக்கு ‘டியர் சிங்கப்பூர்’ என்ற ஆவணப்படத் தொடராக அடுத்த மாதம் திரையிடப்படும்.