சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் போக ஆசையா..?? குறைந்த செலவில் செல்வதற்கு இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!

கோடைகால விடுமுறை நாட்களில் நீங்கள் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டால் அதற்கு ஒரு சிறந்த நாடு சிங்கப்பூர். ஆனால் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் செல்வது எப்படி என்று பலருக்கும் தெரியாமல் உள்ளது. அதேபோல் குறைந்த செலவில் எப்படி செல்லலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.
குறைந்த செலவில் நீங்கள் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் செல்வதற்கு முன்னதாகவே உங்களது பயண ஏற்பாடுகளை செய்வது சிறந்தது. ஏனென்றால், விமான பயணச்சீட்டின் விலை அப்பொழுது தான் மிகவும் குறைவாக இருக்கும். நீங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே உங்களது விமான சீட்டை எடுத்து விட்டால் பெரிய அளவில் உங்களுடைய பணத்தை சேமிக்கலாம்.
அடுத்தபடியாக நீங்கள் விசா எடுப்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் ட்ராவல் நிறுவனங்கள் மூலம் விசா எடுத்தால் அவர்கள் விசாவின் தொகையை விட அதிகமான தொகையை அவர்களின் சேவைக்கான தொகையாக கேட்பார்கள்.
இதனால் இதுவே உங்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகையாக அமையும். ஆனால் உங்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ சிங்கப்பூரில் இருக்கும் பட்சத்தில் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் அல்லது சிங்கப்பூர் குடிமக்கள் உங்களுக்காக டூரிஸ்ட் விசா அப்ளை பண்ணும் பட்சத்தில் அதற்காகவும் செலவு வெறும் $30 மட்டுமே ஆகும்.
இல்லையென்றால், லிட்டில் இந்தியாவில் இருக்கும் ஒரு சில டிராவல்ஸ் நிறுவனங்கள் 50 டாலர் மட்டுமே சார்ஜ் செய்கிறார்கள்.
அடுத்தபடியாக அதிகமான தொகை செலவாவது நீங்கள் தங்கும் அறைக்கு தான். தங்கும் அறை என்பது நீங்கள் குடும்பமாக தங்கும் பட்சத்தில் ஹோட்டல்களை தேர்வு செய்யாமல் சிங்கப்பூரில் வாடகை வீட்டை தேர்வு செய்வது சிறப்பு. ஆனால் இது குறைந்தபட்சம் ஒரு மாத காலம் சிங்கப்பூரில் தங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நீங்கள் ஐந்து அல்லது பத்து நாட்கள் மட்டுமே சிங்கப்பூர் செல்கிறீர்கள் என்றால் நீங்கள் ஹோட்டல் அறையை தான் தேர்வு செய்ய வேண்டும். ஹோட்டல் அறையும் சிங்கப்பூரில் ஒரு சில இடங்களில் குறைவான தொகையில் கிடைக்கும். குறிப்பாக லிட்டில் இந்தியாவில் குறைந்த செலவில் நீங்கள் அறைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் ஒரு மாதம் சிங்கப்பூரில் தங்க வேண்டியது போல் இருந்தால் மாஸ்டர் பெட்ரூம் ஆக தேர்வு செய்யாமல் காமன் ரூமாக தேர்வு செய்யும் பட்சத்தில் உங்களுடைய செலவு குறையும். சிங்கப்பூரில் வீடு வாடகைக்கு 900 டாலர் முதல் 1800 டாலர் வரை வாடகைக்கு கிடைக்கிறது.
அடுத்தபடியாக நீங்கள் சிங்கப்பூரில் அதிகமாக செலவு செய்வது உணவிற்கு தான். நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பொழுது உங்களது விமான டிக்கெட்டில் உங்களுக்கான லக்கேஜ் ஆனது 25 முதல் 30 கிலோ வரை கொடுப்பார்கள். நீங்கள் அங்கே எத்தனை நாட்கள் தங்குகிறீர்களோ அதை பொறுத்து காய்கறி, அரிசி வகைகள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துச் சென்றால் உங்களுடைய சாப்பாட்டு செலவை கணிசமாக குறைக்கலாம்.
சிங்கப்பூரில் நீங்கள் சுற்றி பார்ப்பதற்கான செலவுகள் சற்று அதிகமாகவே வரும். ஆனால் நீங்கள் சிங்கப்பூரில் டூரிஸ்ட் விசாவில் செல்வதே சுற்றிப் பார்ப்பதற்கு என்பதால் அதில் வரும் செலவுகளை குறைக்க நினைக்க வேண்டாம். ஆனால் ஒரு சில இடங்களில் சிங்கப்பூரர்களுக்கு சற்று குறைவான தொகையை நுழைவு கட்டணமாக வாங்குவார்கள். அதை உங்களால் பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தோராயமாக நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1,50,000 த்தில் இருந்து அதிகபட்சம் 2.50 லட்சம் வரை வைத்துக் கொள்வது சிறப்பு. சிங்கப்பூர் கட்டாயமாக சுற்றிப் பார்க்க வேண்டிய நாடுகளில் ஒன்று. நீங்கள் புதிதாக வெளிநாடு பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால் உங்களின் சிறந்த தேர்வாக சிங்கப்பூர் இருக்கும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இணையதள பக்கத்தில் இணைந்திருங்கள்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
