BlueSG இல் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணிபுரிந்த 24 வயது ஃபட்லி அன்வர் BlueSG சேவையை செயலியை தவறாக பயன்படுத்தியுள்ளார். இவருக்கு வாகனம் ஓட்டும் உரிமமும் இல்லை.
தமது நண்பரை BlueSG செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி நண்பருக்கு தெரியாமல் அவருடைய கணக்கை உபயோகித்து வந்துள்ளார். மேலும் நண்பரின் வாகன உரிமத்தை வைத்து வண்டிகளை இரவல் பெற்று பயன்படுத்தி வந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதியிலிருந்து 2024 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி வரை ஃபட்லி 150 முறை செயலியை இலவசமாக முறையில் பயன்படுத்தி வாகனம் ஓட்டியிருக்கிறார்.
8 தடவை அவர் BlueSG தரவு தொகுப்பில் இரவல் நேரத்தை 0 நிமிடங்களுக்கு மாற்றி வண்டிகளை இலவசமாக பயன்படுத்தி வாகனம் ஓட்டியிருக்கிறார்.
நேர்மையற்ற முறையில் BLUESG சேவைகளை பெற்றதையும் உரிமம் காப்புறுதி இல்லாமல் வண்டி ஓட்டியதையும், நண்பரை பொய் கூறச் சொல்லி நீதியைத் தடுத்ததையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த குற்றத்திற்காக ஃபட்லி அன்வாருக்கு நேற்று (ஆகஸ்ட்) 13ஆம் தேதி 7 மாதம் 6 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வாகனம் ஓட்ட 3 ஆண்டுத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
BlueSG நிறுவனத்திடமிருந்து இலவசமாக வண்டிகளை இரவல் பெற்றதால் BlueSG நிறுவனத்திற்கு 650 வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.