ஏப்ரல் 10 முதல் கட்டண உயர்வு..!!

ஏப்ரல் 10 முதல் கட்டண உயர்வு..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளை சமாளிப்பதற்காக கம்ஃபோர்ட் டெல்கிரோ மற்றும் கிராப் நிறுவனங்கள் டாக்ஸி கட்டணங்களை ஏற்கனவே உயர்த்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது TADA மற்றும் Gojek நிறுவனங்கள் இரண்டு பயணம் முன்பதிவு நிறுவனங்கள் ஓட்டுநர் கூடுதல் கட்டணங்களை தற்போது உயர்த்தியதாக அறிவித்திருக்கிறது.

இதை நடைமுறைக்கு வருவது ஏப்ரல் 10 முதல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31 வரை இந்த கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நிறுவனங்கள் இயக்குகின்றான் டாக்ஸி பயன்படுத்தும் பொதுமக்கள் கூடுதலாக குறைந்தபட்ச கட்டணமாக $0.90 முதல் செலுத்த வேண்டி இருக்கும்.

ஓட்டுனர்களுக்கு உதவுவதற்காகவே நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்திருக்கிறது.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் இணை அமைப்பான தேசிய தனியார் வாடகை ஓட்டுனர் சங்கம் இந்த விபரங்களை சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

TADA பயணிகள் 18 டாலருக்கு குறைவான கட்டணத்திற்கு $0.90 காசு கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். 18 டாலருக்கு அதிகமாக என்றால் $1.20 காசு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் துணை தலைமைச் செயலாளர் இயோ வான் லிங் எரிபொருள் விலை உயர்வு காரணமாக வருமானம் குறைந்ததாக ஓட்டுனர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து அவர்களுக்கு உதவும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK