சிங்கப்பூரில் MOE & நீதி அமைச்சகத்தில் நிதி மேலாண்மை குறைபாடுகள்..!
சிங்கப்பூர்: கல்வி அமைச்சகம் (MOE) மற்றும் நீதி அமைச்சகத்தின்கீழ் உள்ள துறைகளில் நிதி மேலாண்மை குறைபாடுகள் ஏற்பட்டதாக 2024/25 ஆண்டுக்கான தலைமை கணக்காளர் அலுவலக (AGO) அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அறிக்கையின் படி, ஒரு பயிற்சி நிறுவனம் ஒரே பாடநெறிக்கே சுமார் 300 மானியங்களை கோரியது. மேலும், ஒரு பயனர் 8 படிப்புகளுக்கு மானியம் பெற்றும் சேராமல் விட்டதால், S$116,200 பயன்படுத்தப்படாத தொகை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் திருப்பப்படாமல் தங்கியிருந்தது. தற்போது அந்த தொகை முழுமையாக மீட்கப்பட்டதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இனி, மானியம் கண்காணிப்புக்காக புதிய அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், நீதி அமைச்சகத்தின்கீழ் உள்ள திவால்நிலை மற்றும் பொது அறங்காவலர் அலுவலகம் நிறுவனம் கலைப்பாளர்களின் நிதியை அவர்களின் அனுமதியின்றி கால வைப்புத் தொகையில் டெபாசிட் செய்ததில், 2019 ஏப்ரல் முதல் 2023 நவம்பர் வரை S$14.25 மில்லியன் வட்டி ஈட்டப்பட்டதாகும். ஆனால் அந்த இலாபங்கள் தனித்தனி கலைப்பு கணக்குகளில் இல்லாமல் ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சட்ட அமைச்சகம் புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, கலைப்பாளரின் வேண்டுகோளின் பேரிலேயே வைப்புத் தொகை செய்யப்படும்.
மேலும், MOE கடந்த ஆறு ஆண்டுகளில் பிற பயிற்சி நிறுவனங்களிலும் போலியான மானியம் கோரிக்கை நடந்ததா என்பதை முழுமையாக விசாரிக்க இருப்பதாகவும், இனி அனைத்து பயிற்சி நிறுவனங்களும் வருடாந்திர செல்லுபடியாகும் அறிக்கைகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.