ஹௌகாங் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! மூவர் மருத்துவமனையில் அனுமதி..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (16.02.26) மதியம், ஹௌகாங் பகுதியில் உள்ள HDB அடுக்குமாடி பொதுமக்கள் குடியிருப்பின் தரைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த சம்பவத்தில் ஏற்பட்ட புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து ஹௌகாங் அவென்யூ 8, பிளாக் 418 இன் தரை தளத்தில் நேற்று(16.02.26) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெடோக் நீர்த்தேக்கம்–புங்கோல் கிளைத் தலைவர் ஹாங் ஜியாங், இயந்திர கிரேன்
தீப் பிடித்ததே விபத்திற்குக் காரணம் என கூறினார்.அன்றைய தினம் பிற்பகுதியில், அல்ஜூனிட்-ஹௌகாங் நகர சபையைச் (AHTC) சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரரால் சம்பந்தப்பட்ட கிரேன் பயன்படுத்தப்பட்டதாக ஹங் சூ-யாங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அதிர்ஷ்டவசமாக, தீ தரைத் தளத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டு மேல்தளங்களுக்கு பரவவில்லை. எனினும், புகையை உள்ளிழுத்ததால் சில குடியிருப்பாளர்கள் உடல்நல பாதிப்புக்குள்ளாகினர். தீயை அணைக்க துணைநின்ற இரண்டு குடியிருப்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
சம்பவத்திற்குப் பிறகு, நகர சபையுடன் தொடர்பு கொண்டு நிலைமையை முழுமையாக ஆய்வு செய்ய நிபுணர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஹாங் ஜியாங் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அடிப்படை சமூக அமைப்புகள் தேவையான உதவிகளை வழங்கும் என்றும் கூறினார்.
அல்ஜூனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யான் யான்சோங், தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு மேலே வசிக்கும் குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களின் பாதுகாப்பையும் குடிநீர், மின்சாரம், எரிவாயு சேவைகள் இயல்பாக செயல்படுவதை உறுதி செய்ததாக தெரிவித்தார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மேலும், வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டிடத்தின் கட்டமைப்பு பாதுகாப்பை மதிப்பிட சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். சுத்தம் செய்வதும், பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொது இடங்களில் விளக்குகள் மற்றும் பிளம்பிங் பணிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.மேலும் சுத்தம் செய்தல் மற்றும் மீண்டும் வண்ணம் தீட்டும் பணிகள் இன்று (17.02.26) வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
