சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!!

சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் கலாச்சார பாஸை அடுத்த வாரம் முதல் ஆன்லைனில் பயன்படுத்தலாம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிங்கப்பூர் கலாச்சார பாஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் கலாச்சார பாஸ் அடுத்த மாதம் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் மேலும் 400க்கும் மேற்பட்ட கலை மற்றும் கலாச்சாரத் திட்டங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.

இந்த பாஸ் இந்த ஆண்டு(2025) செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2028 வரை செல்லுபடியாகும்.

வரும் திங்கட்கிழமை செப்டம்பர் 1 முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து சிங்கப்பூரர்களும் நேரடி நிகழ்ச்சிகள், பட்டறைகள், வழிகாட்டப்பட்ட சுற்றுப் பயணங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் நடவடிக்கைகளில் பங்கேற்க சிங்கப்பூர் கலாச்சார பாஸ் அதிகாரப்பூர்வ இணையத்தில் சேமிக்கப்பட்ட $100 மதிப்பை பயன்படுத்த முடியும்.

தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் sgculturepass.gov.sg இன்று இளையதளத்தை பார்வையிட்டு, singpass மூலம் உள் நுழைந்து சங்கர் சுயவிவரத்தை நிரப்ப வேண்டும். பின்னர் அவர்கள் வலைத்தளத்தின் மூலம் பல்வேறு நிகழ்வுகளை காணலாம்.

அவர்கள் விரும்பிய நிகழ்வை தேர்ந்தெடுத்ததும் “டிக்கெட்டுகளை வாங்கு” என்பதை கிளிக் செய்து அவர்களின் கலாச்சார பாஸை பயன்படுத்தி பணம் செலுத்த தேர்வு செய்யவும்.

அவர்களின் கலாச்சார பாஸை பயன்படுத்தி பணம் செலுத்த தேர்வு செய்யவும். உங்களிடம் போதுமான இருப்பு இல்லை என்றால் அவர்கள் கிரெடிட் கார்டு அல்லது PayNow மூலம் பணம் செலுத்தலாம்.

கலாச்சார பாஸை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் தேவைப்படும் சிங்கப்பூரார்கள் serviceSG மையங்கள் அல்லது சமூக கிளப்புகளில் உதவி பெறலாம்.

அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தீவு முழுவதும் உள்ள 18 சமூகம் கிளப்புகளில் மக்கள் உதவி பெறலாம். இந்த 18 சமூக கிளப்புகள்: பிஷான், பிராடல் ஹைட்ஸ், சாங்கி-சிமேய், சோவா சூ காங், கிளமென்டி, ஜூ சுவான், காக்கி புக்கிட், கல்லாங், யிஷூன் கிழக்கு, பாசிர் ரிஸ் கிழக்கு, புங்கோல் 21, செங்காங், செஞ்சா-காஷூ, டாம்பனிஸ் மேற்கு, தஞ்சோங் பகார், தக் நெய், உட்லேண்ட்ஸ் ஸ்டார் மற்றும் யூ டீ சமூக கிளப்.

மூன்று வருட செயல்படுத்தல் காலத்தில் தீபம் முழுவதும் உள்ள ஒன்பது serviceSG மையங்களில் ஏதேனும் ஒன்றில் பொதுமக்கள் உதவி பெறலாம். இந்த ஒன்பது serviceSG மையங்களும் புக்கெட் கான்பெர்ரா, ரெட்ஹில், கம்போங் வெய்ஷே, கெட் ஹாங், யிஷூன் சென்ட்ரல், புங்கோல் ஒருங்கிணைந்த சமூக மையம், டாம்பனிஸ் ஹப், தி ஃபிராண்டியர் மற்றும் உட்லேண்ட்ஸ் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

கலாச்சாரம் சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் சுமார் 70 விழுக்காடு நிகழ்வுகளுக்கான டிக்கெட் விலைகள் $50 அல்லது அதற்குக் குறைவாகவே உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வளமான கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை ஆராய சிங்கப்பூரர்கள் அவர்கள் கலாச்சார பாஸை தீவிரமாக பயன்படுத்தமாறு கலாச்சாரம் சமூக விவகாரங்கள் மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஊக்குவித்தார்.

இந்தத் திட்டத்தில் 400க்கும் மேற்பட்ட தகுதியான திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் எதிர்காலத்தில் மேலும் சேர்க்கப்படும் என்றும் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் கலாச்சார பாஸ் சேமிக்கப்பட்ட மதிப்பை மறு விற்பனை செய்யவும் அல்லது பணமாக மீட்டெடுக்கவும் முடியாது. ஆனால் சிங்கப்பூரர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான டிக்கெட்டுகளை வாங்க இதை பயன்படுத்தலாம்.

கலாச்சாரம் சமூக விவகாரங்கள் மற்றும் இளைஞர் அமைச்சகம் அதிகாரப்பூர்வ சேனல்கள் அல்லது gov.sg மூலம் மட்டுமே தகவல்களை தெரிவிப்பார்கள் என்றும் சிங்கபூரர்கள் கலாச்சார பாஸ் பெற எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.

கலாச்சார பாஸூடன் தொடர்புடைய ஏதேனும் வலைத்தளத்தை பார்த்தாலோ அல்லது செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன் புள்ளிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறும் ஏதேனும் குறுஞ்செய்தியை பெற்றாலோ அது ஒரு மோசடி செயலாகும் என அறிவித்துள்ளது.

கலாச்சார பாஸ் தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான தகவலை நீங்கள் கண்டறிந்தால் கலாச்சார பாஸில் வாடிக்கையாளர் சேவை ஹாட்லைனை 63383632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது ஸ்கேம்ஷீல்ட் செயலி மூலம் புகார் அளிக்கலாம்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan