சுடுநீர் - குளிர்ந்த நீர் - சாதாரண நீர்: எது சிறந்தது?
தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்குப் பலரும் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் குடிக்கும் தண்ணீரின் வெப்பநிலையும், தன்மையையும் பலரும் கவனத்தில் கொள்வதில்லை. சுடுநீர், குளிர் நீர், சாதாரண நீர் இவற்றை பருகுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், எந்த தண்ணீரை எப்போது பருகுவது சிறந்தது என்றும் இங்கு பார்ப்போம்.
தண்ணீரின் வெப்பநிலையும் அதன் விளைவுகளும் 1. மிகவும் குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்): இது செரிமானத்தை மெதுவாக்கும் தன்மை கொண்டது. உணர்திறன் மிக்க தொண்டைகளைக் கொண்டவர்களுக்கு எளிதில் எரிச்சலூட்டக்கூடும்.
2. குளிர்ந்த நீர்: உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியான உணர்வைத் தரும். இருப்பினும், இந்த தண்ணீரை அதிகமாகக் குடிப்பது செரிமானத்தை மெதுவாக்கக்கூடும் மற்றும் சிலருக்கு அசெகரியத்தை (Discomfort) உண்டாக்கலாம்.
3. அறை வெப்பநிலையில் உள்ள நீர் (சாதாரண நீர்): உடலில் நீர்ச்சத்தை சீராகப் பேண இது மிகவும் உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்கவும் இது பெரிதும் துணைபுரிகிறது.
4. வெதுவெதுப்பான நீர்: உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. உணவு செரிமானத்திற்கும் இது மிகச் சிறந்த உதவியாக இருக்கும்.