சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..??

சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..??

சிங்கப்பூரில் குற்றப் புலனாய்வுத் துறை, காவல்துறையின் உளவு பிரிவு, சிறப்பு செயலாக்க தளபத்தியம் ஆகியவற்றின் அதிகாரிகள் சிங்கப்பூர் முழுவதும் ஜூலை 6 அன்று அதிரடி சோதனைகள் செய்துள்ளனர்.

அதிரடி சோதனைகள் எங்கெங்கு நடந்துள்ளது?
ஈசூன், அங் மோ கியோ, தோ பாயோ, பொத்தோங் பாசிர் , சாங்கி, பாசிர் ரிஸ், பிடோக், ஜூ சியாப், தெம்பனிஸ், காக்கி புக்கிட், வெஸ்ட் கோஸ்ட் , புக்கிட் பாத்தோக், சுவா சூ காங்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனை ஈடுபட்டபோது 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக என்பது தெரியவந்துள்ளது.

இந்த சோதனையில் S$720,000 அதிகமான தொகை, கைபேசிகள், கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் சூதாட்டம் தொடர்புடைய துணைப் பொருட்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

14 பேர் ஆண்கள் மூன்று பேர் பெண்கள். பிடிபட்டவர் 45 இருக்கும் 76 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 47க்கும் 76 க்கும் இடைப்பட்ட வயதினை உடைய நான்கு ஆண்களும், 47 வயதுடைய ஒரு பெண்ணும் சூதாட்ட கட்டுப்பாட்டு சட்டம் 2022 இன் கீழ் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 8) குற்றம் சாட்டப்பட உள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடுமையான தண்டனைகள் சூதாட்ட கட்டுப்பாட்டு சட்டம் 2022 இன் கீழ் பின்வரும் தண்டனைகள் விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
சூதாட்டக் கூட உதவியாளர்/நடத்துனர்:
சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளை நடத்திய குற்றம் நிறுவனமானால் அதிகபட்சமாக S$500,000 அபராதமும் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

விற்பனை முகவராக இருந்தால் முகவர் செய்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக S$200,000 அபராதமும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

சட்டவிரோத சூதாட்ட சேவை வழங்குவரிடம் சூதாடுபவருக்கு அதிகபட்சமாக S$10,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

உலக கிண்ண கால்பந்து போன்ற முக்கிய அனைத்து உலக விளையாட்டு நிகழ்வுகளின் போது சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் அதிகரிப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது. இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் அல்லது அதில் லாபம் ஈட்டுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனவும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் இத்தகைய சூதாட்டங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சூதாட்டத்திற்கு அடிமையான நபர்களுக்கு உதவி தேவைப்பட்டால் சூதாட்ட பிரச்சனை குறித்த தேசிய மன்றத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். தொலைபேசி எண்: 1800-6-668-668 என்ற எண்களின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.