சிங்கப்பூரில் மினிபஸ் விபத்து வழக்கு..!! ஓட்டுநருக்கு சிறை..!!

சிங்கப்பூரில் மினிபஸ் விபத்து வழக்கு..!! ஓட்டுநருக்கு சிறை..!!

சிங்கப்பூர்: அலட்சியமாக மினிபஸ்ஸை இயக்கி, 72 வயது பெண் சக ஊழியர் கீழே விழுந்து உயிரிழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 8 வாரங்கள் சிறை தண்டனை வழங்கி உள்ளது.

61 வயதான மினி பஸ் ஓட்டுநரான ஆங் ஊன் லெங்(Ang Oon Leng) என்பவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் விடுதலை ஆனதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் பெற தடையும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சுமார் $2,200 இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

72 வயதுடைய லீ பி லி என்ற பெண்மணி இந்த விபத்தில் பலியானவர் ஆவார். இவர் ஓட்டுநரின் அதே துப்புரவு நிறுவனத்தில் சக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி அன்று ஹிலியன் மால் டாக்ஸி நிறுத்தத்தில் சக ஊழியர்களை இறக்கிவிட்ட போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2 பயணிகள் இறங்கியதை மட்டும் பார்த்த ஓட்டுநர் வாகனத்தின் பின் கதவை மூடாமலும், மற்றவர்கள் இறங்குகிறார்களா என்பதை பார்க்காமலும் மினிபஸ்ஸை முன்னோக்கி நகர்த்தி உள்ளார்.


இதனால் மினி பஸ்ஸில் இருந்து இறங்கி கொண்டிருந்த லீ பி லி, வாகனம் நகர்ந்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த காயமடைந்துள்ளது.

உடனடியாக பெண்மணி தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார்.

அலட்சியமாக செயல்பட்டு ஒரு மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக சிங்கப்பூர் சட்டப்படி, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டையோ, அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK