சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது..!! பின்னணி என்ன..??

சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது..!! பின்னணி என்ன..??

துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பதிவு பெற்ற லாரி மூலம் சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 3,000 அட்டைப்பெட்டி வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் ஆனது 2026, ஜூன் 26 அன்று நிகழ்ந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (ஜூலை 7) ICA தனது Facebook பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

லாரியில் கொண்டுவரப்பட்ட சரக்கு குவியல்களுக்கு இடையே ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 3000 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனைச் சாவடியில் உள்ள ICA-வின் தேடுதல் மற்றும் பரிசோதனை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த மலேசிய லாரியை தீவிர சோதனைக்கு உட்படுத்திய போது இக்கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட 40 வயதுடைய மலேசிய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளையும், கைது செய்யப்பட்ட ஓட்டுநரையும் சிங்கப்பூர் சுங்கத்துறையிடம்(Singapore Customs) மேற்பட்ட விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சட்டவிரோத கடத்தல்களை முறியடிப்பதிலும் தங்களது அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக செயல்படுவார்கள் என ICA மீண்டும் வலியுறுத்தியுள்ளது.