சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா?
சிங்கப்பூர் ஒரு வளமான நாடு என்றும் அதன் பண மதிப்பு அதிகம் என்றும் பலருக்கும் தெரிந்த உண்மையே. எனவே ஒரு சிலர் அங்கு சொந்தத் தொழில் தொடங்கலாம் என்றும் ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக மீட்டிங் மற்றும் சந்திப்புகளை சிங்கப்பூரில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். இவர்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றால் அதற்கு சிங்கப்பூரின் விதிமுறைகள் படி Business விசா எடுக்க வேண்டும்.
இந்த பதிவில் சிங்கப்பூரில் Business விசா எடுப்பது எப்படி? அதற்கு எவ்வளவு செலவாகும்? என்னென்ன டாக்குமென்ட்கள் தேவை? என்பதை பார்க்கலாம்.
நீங்கள் சிங்கப்பூருக்கு தொழில் சம்பந்தமாக பயணத்தை மேற்கொள்கிறீர்கள் என்றால், நிச்சயமாக டூரிஸ்ட் விசாவில் செல்லக்கூடாது. கண்டிப்பாக Business விசாவில் தான் செல்ல வேண்டும்.
உங்களுக்கு Business விசா எடுத்து தருவதற்கு அனுமதி பெற்ற ஏஜென்சிகள் நிறைய உள்ளனர். அவர்களை அணுகி அவர்கள் கேட்கும் ஆவணங்களை(Documents) சமர்ப்பித்தால் உங்களுக்கு Business விசா எடுத்து தருவார்கள்.
இதற்கு தேவைப்படும் ஆவணங்கள்: 👉Photo 👉14A & V39A Form 👉PASSPORT 👉இந்தியாவில் நீங்கள் கம்பெனி வைத்திருந்தால் அந்த கம்பெனியின் கடிதம். 👉சிங்கப்பூரில் உங்களை எந்த கம்பெனி அழைக்கிறதோ அந்த Company Invite Letter. 👉Last 6 month Bank Account Details 👉நீங்கள் சிங்கப்பூரில் சென்று திரும்பி வருவதற்கான விமான முன்பதிவு சீட்டு.
இந்த டாக்குமெண்ட்களுடன் உங்களுடைய விண்ணப்பத்திற்கான தொகை $2,100 உங்களுக்கு விண்ணப்பித்து தரும் ஏஜென்டின் Service Charge நீங்கள் செலுத்த வேண்டும்.
இதற்கான கால அவகாசம் 15 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
உங்களுடைய Multiple Journey Visa இருக்கும் பட்சத்தில் 30 நாட்கள் நீங்கள் அங்கேயே இருக்கலாம். இரண்டு வருடம் உங்களுடைய விசா காலம் இருக்கும்.
இதை நீங்கள் சரியாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் உங்களுடைய Business விசாவானது உங்களுக்கு எளிமையாக கிடைத்துவிடும். நீங்கள் சிங்கப்பூரில் தொழில் தொடங்க எங்களுடைய வாழ்த்துக்கள். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் சிங்கப்பூரின் ICA இணையதளமான http:://www.ica.gov.sg என்ற பக்கத்தில் மேலும் விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.