சிங்கப்பூரில் மின்னணு சிகரெட்டுகள் இறக்குமதி..!! மலேசிய இளைஞர்கள் கைது..!!
சிங்கப்பூரில் ஸோம்பி கார்ட்ரிட்ஜ்கள் எனப்படும் எட்டோபோலெட் மின்னணு சிகரெட்டுகளை இறக்குமதி செய்த குற்றத்திற்காக 2 மலேசிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12000 – க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகளை இறக்குமதி செய்ததற்காக நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது.
24 வயதான நூரைன் இஸ்மாயில் மற்றும் 26 வயதான முஹம்மது இஸ்த் மெர் முகமது ஹசன் ஆகியோர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மலேசியர்கள்.
எட்டோமிடேட் என்ற வேதிப்பொருள் இருப்பதாக நம்பப்படும் 12,273 மின்னணு சிகரெட்டுகளுடன் மலேசியாவில் இருந்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் அவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் முதல் எட்டோமிடேட் மற்றும் அதன் ஒப்புமைப் பொருட்கள், போதைப் பொருட்கள் தவறாக பயன்படுத்துதல் சட்டத்தின் கீழ் “C” பிரிவு கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம், திருத்தப்பட்ட புகையிலை மற்றும் மின்னணு சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஒரு பகுதியாக மலேசியாவில் மின்னணு சிகரெட்டுகளை வைத்திருப்பது, பயன்படுத்துவது, இறக்குமதி செய்வது மற்றும் விற்பனை செய்வது போன்ற குற்றத்திற்கான தண்டனைகளை அரசாங்கம் அதிகரித்து உள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தற்போதும 3 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் முகமது இஷத் என்பவருக்கு 5 முதல் 15 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
இரு குற்றவாளிகளும் அடுத்த மாதம் (ஜூன்) 26 ஆம் தேதி மின்னணு சிகரெட்டுகளைக் இறக்குமதி செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார அறிவியல் ஆணையத்தின் படி இந்த ஆண்டு (2026) முதல் காலாண்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போன்ற பல்வேறு சோதனைச் சாவடிகளில் 26,000-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகள் மற்றும் தொடர்பான பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.